ETV Bharat / state

மின்சார திருத்த சட்ட மசோதா பாதுகாப்பு இல்லாதது - அமைச்சர் செந்தில் பாலாஜி

author img

By

Published : Aug 9, 2022, 8:04 AM IST

மத்திய அரசு கொண்டுள்ள மின்சார திருத்த சட்ட மசோதா ஏழை எளிய மக்கள் விவசாயிகள் மற்றும் நெசவாளர்களுக்கு எதிரானது என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

விவசாயி, நெசவாளர்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லாதது மின்சார திருத்த சட்ட மசோதா - செந்தில் பாலாஜி

சென்னை: அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மத்திய அரசு மின்சார திருத்த சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நிலையில், திமுக நாடாளுமன்ற தலைவர் டி.ஆர்.பாலு இந்த சட்ட திருத்தத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை எடுத்து கூறி எதிர்ப்பு தெரிவித்தார்.

ஏற்கனவே இதே விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சரும் மின்சாரத் திருத்த சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய மின்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்டத் திருத்த மசோதா ஏழை எளிய மக்களுக்கு எதிரானது. மேலும் விவசாயிகள் நெசவாளர்கள் 100 யூனிட் இலவச மின்சாரம் இருக்க கூடிய ஏழை மக்களுக்கு எதிரான மசோதா என தெரிவித்தார்.

இந்த சட்ட மசோதாவால் இருக்கக்கூடிய பாதிப்புகளை தெரிந்து கொண்டே மத்திய அரசு தாக்கல் செய்துள்ளதாக கூறினார். மேலும் மின் விநியோக துறையில் தனியார் நிறுவனத்தை அனுமதிக்கும் பொருட்டு, மாநில அரசுகள் மக்களுக்கு உருவாக்கிய மின்சார கட்டமைப்புகளை எவ்வித செலவும் இன்றி தனியார் நிறுவனங்கள் அந்த கட்டமைப்புகளை பயன்படுத்தக்கூடிய வகையில் லாபம் வரவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக மட்டுமே இந்த சட்ட மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.

சட்ட மசோதாவில் இலவச மின்சாரம் பெற்று வரும் விவசாயிகள், நெசவாளர்கள், ஏழை எளிய மக்களுக்கான இலவச மின்வினியோகம் குறித்து எவ்வித தகவலும் இல்லை எனவும் இது மிகப்பெரிய ஒரு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது எனவும் தெரிவித்தார்.

மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய மின்சார ஒழுங்குமுறை ஆணையங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இந்த சட்ட மசோதாக்கள் மூலம் செல்லக்கூடிய வழிமுறைகள் இருப்பதாகவும், இதன் காரணமாக மின்சார கட்டணம் பல மடங்கு உயரக்கூடிய அபாயம் உள்ளது.

நாடாளுமன்றத்தில் திமுக இந்த சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து இந்த சட்ட மசோதா நாடாளுமன்ற நிலை குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள அதிமுக, இந்த மின்சாரத் திருத்த சட்ட மசோதா குறித்து தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்" செந்தில் பாலாஜி கூறினார்.

இதையும் படிங்க: உயர் கல்வி பயிலும் பெண்களுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி - வழிகாட்டுதல்கள் வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.