ETV Bharat / state

ராஜிவ் காந்தி கொலை வழக்கு: '7 பேரை விடுதலை செய்யும் அதிகாரம் அரசுக்கு இல்லை' - No power to release all 7 Rajiv killer accused, govt reply

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி உட்பட 7 பேரை விடுதலை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்றும் ஆளுநருக்குப் பரிந்துரை மட்டுமே செய்ய முடியும் எனவும் தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

COURT
COURT
author img

By

Published : Feb 12, 2020, 3:58 PM IST

Updated : Feb 12, 2020, 4:07 PM IST

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி உட்பட 7 பேரையும் விடுவிக்கும்படி, தமிழ்நாடு அமைச்சரவை கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்குப் பரிந்துரைத்தது.

தமிழ்நாடு அரசு பரிந்துரை மீது ஆளுநர் இதுவரை எந்த முடிவும் எடுக்காததால், தன்னை விடுதலை செய்யமால் சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளதாகவும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தன்னை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா, பொங்கியப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், நளினி உள்ளிட்ட 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என வழக்கு தொடரவில்லை என்றும் வேறு எந்தச் சலுகையும் அரசிடமிருந்து எதிர்பார்க்கவில்லை எனவும் வாதிட்டார்.

மேலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அமைச்சரவையின் ஆலோசனைக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டுமென்றும் ஆளுநர் கையெழுத்து கூட போட தேவையில்லை என்றும் கூறிய வழக்கறிஞர், தீர்மானம் நிறைவேற்றிய பிறகு ஒவ்வொரு நாளும் நளினி சட்டவிரோதமாகவே சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

அரசுத் தரப்பில் ஆஜரான அரசுத் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ. நடராஜன், உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து மாநில அரசு நளினி உட்பட 7 பேரின் விடுதலை தொடர்பாக 2018ஆம் ஆண்டு செப்டம்பரில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்குப் பரிந்துரை அனுப்பியது எனவும் அமைச்சரவை பரிந்துரைத்தாலும் அது தொடர்பாக எந்த உத்தரவையும் அரசு பிறப்பிக்கவில்லை எனவும் தெரிவித்தார். மேலும் ஆளுநருக்கு அனுப்பிய தீர்மானம் என்பது பரிந்துரை மட்டுமே என்றும் எந்த உத்தரவையும் பிறப்பிக்க அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதையடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு நளினி சட்டப்பூர்வ காவலில் இருக்கிறாரா? அல்லது சட்டவிரோத காவலில் இருக்கிறாரா? என்பது குறித்து தெளிவுப்படுத்த அரசுத் தலைமை குற்றவியல் வழக்கறிஞருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை பிப்ரவரி 18ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: 'ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார்' - சி.வி.சண்முகம்

Last Updated : Feb 12, 2020, 4:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.