ETV Bharat / state

அம்மா உணவகம் மூலம் இலவச உணவு வழங்க தேவை இல்லை - மேயர் பிரியா - சென்னை மாநகராட்சி மேயர்

பருவமழை காலத்தில் சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு ஒவ்வொரு மண்டலத்திலும் மாநகராட்சி சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. அம்மா உணவகம் மூலம் இலவச உணவு வழங்கப்படத் தேவை தற்போதைக்கு இல்லை எனச் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

free food  Amma Restaurant  mayor priya  mosquito net  அம்மா உணவகம்  இலவச உணவு  மேயர் பிரியா  பருவமழை  மாநகராட்சி  chennai corporation  சென்னை மாநகராட்சி  சென்னை மாநகராட்சி மேயர்  அறநிலையத்துறை
மேயர் பிரியா
author img

By

Published : Nov 13, 2022, 10:44 AM IST

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் திரு.வி.க. நகர் மண்டல அலுவலகத்தில், திரு.வி.க. நகர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பயனாளிகளுக்கு விலையில்லா கொசுவலைகளை வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, "தற்பொழுது இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் கொசுவலைகள் சென்னை மாநகராட்சியிடம் தயாராக உள்ளது. ஒவ்வொரு பகுதியாகக் கொசுவலை வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறோம்.

முதல் கட்டமாகச் சாலை ஓரத்தில் வசித்து வரும் மக்களுக்கும், நீர்நிலைப் பகுதியில் வசித்து வரும் பொது மக்களுக்கும் கொசு வலைகள் வழங்கப்பட உள்ளது. கடந்த பத்து நாட்களாகச் சென்னையில் தொடர் மழை பெய்து வந்தாலும் மாநகராட்சி பணியாளர்கள் துரிதமாக பணியாற்றி வருகின்றார்கள். இதனால் எந்த பகுதியிலும் மழை நீர் தேக்கம் இல்லாத சூழலே நிலவுகிறது. சாலையோர பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஒவ்வொரு மண்டலத்திலும் சுமார் 15,000 பேருக்கு மாநகராட்சி சார்பில் உணவு அளிக்கப்பட்டு வருகிறது.

மழைநீர் வடிகால் பணியினால் சேதம் அடைந்துள்ள சாலைகளுக்கு பேட்ச் வொர்க் ( Batch work) அமைக்கும் பணிகள் நடைபெற்ற வருகிறது. மழைக்காலம் முடிந்த பிறகு முழுமையாக முறையான சாலைகள் அமைக்கும் பணி நடைபெறும். சென்ற ஆண்டு பருவமழையின் போது சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை நீர், கழிவுநீர் தேங்கி இருந்தது. ஆனால் இந்த ஆண்டு எந்த பகுதியிலும் மழைநீர் தேங்கவில்லை.

பருவமழை காலத்தில் சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு ஒவ்வொரு மண்டலத்திலும் மாநகராட்சி சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. அம்மா உணவகம் மூலம் இலவச உணவு வழங்கப்படத் தேவை தற்போதைக்கு இல்லை. சென்னை மாநகராட்சி உடன் குடிநீர் வாரியம், மின்சாரத்துறை என்று அனைத்து துறையும் ஒருங்கிணைந்து பருவமழை காலத்தில் போர்க்கால அடிப்படையில் செயலாற்றி வருகிறோம்" என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் சேகர்பாபு,"அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் இருக்கின்ற சிலைகளைப் பாதுகாக்க ஏற்கனவே நீதிமன்றம் பாதுகாப்பு அறைகளை உருவாக்க உத்தரவிட்டிருந்தது. பாதுகாப்பு அறைகளை ஏற்படுத்துகின்ற பணியில் கடந்த காலங்களில் தொய்வு பெற்றிருந்தது.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு வடபழனியில் உள்ள பரத்வாஜ் சுவாமி கோயிலில் மாதிரி பாதுகாப்பு அறை ஏற்படுத்தினோம். அது உறுதித் தன்மை உடையது என்று கண்டறியப்பட்டு புதிய பாதுகாப்பு அறைகள் அமைப்பதற்கான டெண்டர் கோரப்பட்டு இருக்கிறது. அந்தந்த மண்டல இணை ஆணையர்களுக்கு அதற்கு உண்டான அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த பணிகள் ஓராண்டுக்குள் முடிவடையும்.

இந்து அமைப்புகளிடம் இருக்கும் பொழுது திருக்கோவில்கள் பராமரிக்கப்படுவதை விட கூடுதலான அக்கறை கொண்டு இந்த அரசு திருக்கோயில் பராமரிப்பில் சிறப்பான ஈடுபட்டு வருகிறது. பருவமழை காலத்தில் எந்த பாதிப்பு வந்தாலும் சமாளிப்பதற்கு உண்டான அனைத்து நடவடிக்கையும் அரசு எடுத்து வருகிறது" என கூறினார்.

இதையும் படிங்க: சாதாரண மனிதராக எனது மகள், கணவருடன் வாழ விரும்புகிறேன் - நளினி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.