சென்னை பல்லவன் இல்லத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், போக்குவரத்துத் துறையில் கரோனா வைரஸ் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
"அண்டை மாநிலங்களிலிருந்து வரும் பேருந்து பயணிகளைத் தமிழ்நாட்டில் உள்ள 21 சோதனைச்சாவடிகளில் சோதனை செய்ய திட்டமிட்டுள்ளோம். குளிர்சாதன பேருந்துகளில் துணிகள், போர்வைகள் வழங்குவது தடைசெய்யப்பட்டுள்ளது.
சுத்தப்படுத்துவதற்கு லைசால் கிருமி நாசினியைப் பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தனியார் பேருந்து நிர்வாகிகளும் அதனை அமல்படுத்துவதாகக் கூறியுள்ளனர்.
ஓட்டுநர், நடத்துநர்களுக்கு முகக்கவசம் வழங்கப்படும். ஓலா, உபர் டாக்சிகள், ஆட்டோ ரிக்ஷாக்கள் ஆகியவற்றில் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வருகின்ற 31ஆம் தேதி வரை ஆர்.டி.ஓ. எனப்படும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் பழகுநர், ஓட்டுநர் உரிமம் வழங்குவதை நிறுத்தியுள்ளோம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க : '2 ஆண்டுக்கு ஒருமுறை வாகன புதுப்பித்தல் முறை' - அமைச்சர் தகவல்