சென்னை திரு.வி.க நகர் தொகுதிக்குபட்ட பட்டாளத்தில் உள்ள கரோனா தடுப்பு முகாம் மற்றும் பரிசோதனை மையத்தை அமைச்சர் ஆர். பி. உதயகுமார் நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, " 381 ஆவது வயதை கடந்த சென்னை மாநகரத்துக்கு வாழ்த்துக்கள்.
தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் துவங்கி தொடர்ந்து மழை பெய்து வருவதாவும் தமிழ்நாட்டில் சராசரியாக 252.2 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இதன் காரணமாக கடந்த ஆண்டைக் காட்டிலும் தமிழ்நாட்டின் பவானிசாகர், மணிமுத்தாறு, பெருஞ்சாணி, பெரியாறு, அமராவதி மற்றும் திருமூர்த்தி உள்ளிட்ட அணைகளின் நீர் கொள்ளளவு கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகரித்து இருக்கிறது.
சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் நீர்த்தேக்கங்களில் நீரின் இருப்பு கொள்ளளவு கடந்த ஆண்டை விட அதிகமாக உள்ளது நமக்கு ஆறுதல் அளிக்கிறது. இதன் காரணமாக வரும் ஆண்டில் சென்னைக்கு குடிநீர் சிக்கல் ஏழாது என நாம் நம்பலாம்.
தமிழ்நாட்டில் தற்போது நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் சேலம், தர்மபுரி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை ஆகிய 5 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் கரோனா பாதிப்பு தொற்றிலிருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. கரோனா தொற்று நோய்க்கு மருந்து இன்னும் கண்டுபிடிக்காத நிலையில் இதய நோய், நீரிழிவு நோய், இரத்த அழுத்த நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படும்போது அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது சவாலாக இருக்கிறது.
அவர்களில் ஒருவர் கூட உயிரிழக்கக் கூடாது என்று அதிக கவனம் செலுத்தி வருகிறோம்.
இ - பாஸ் முறை ரத்து செய்வது குறித்த கேள்விக்கு, இந்திய அரசின் வழிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு தொடர்ந்து ஏற்பட்டு வரும் பாதிப்புகள் குறித்த விரைவில் நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.