ETV Bharat / state

சூரப்பா விசாரணை அறிக்கை வழக்கு: இடைக்கால உத்தரவை நீட்டித்து நீதிபதி உத்தரவு

surapa
சூரப்பா
author img

By

Published : Apr 16, 2021, 1:23 PM IST

Updated : Apr 16, 2021, 4:21 PM IST

13:14 April 16

சென்னை: சூரப்பா மீதான விசாரணை அறிக்கை மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை இடைக்கால உத்தரவு நீட்டிக்கப்படுவதாக உயர் நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜ் தீர்ப்பளித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பாவுக்கு எதிராகக் கூறப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து, தமிழ்நாடு அரசு 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை ரத்துசெய்யக் கோரியும், விசாரணை ஆணையத்துக்குத் தடை கோரியும், சூரப்பா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, சூரப்பா தரப்பில் அரியர் தேர்வு ரத்துசெய்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்ததாலும், அண்ணா பல்கலைக்கழகத்தைச் சீர்மிகு உயர் கல்வி நிறுவனமாக மாற்ற முயற்சித்ததால், இடஒதுக்கீடு கொள்கைக்குப் பாதிப்பு ஏற்படும் என்ற தவறான கருத்து காரணமாகவும், தன்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

இதையடுத்து விசாரணை ஆணையம், அறிக்கை அளித்தாலும், அதன் மீது அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என நீதிபதி இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்நிலையில் இன்று, இவ்வழக்கு நீதிபதி கோவிந்தராஜ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சூரப்பா தரப்பில் தன்னை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்ற காரணத்திற்காகவே விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டதாகவும், ஆனால் தற்போதுதான் ஓய்வுபெற்றுவிட்டதால், விசாரணை ஆணையம் செல்லத்தக்கதல்ல என வாதிடப்பட்டது.

மேலும், அரசுத் தரப்பில் தலைமை வழக்கறிஞர் முன்னிலையாகி வாதிட இருப்பதால் மற்றொரு தேதிக்கு விசாரணையைத் தள்ளிவைக்க வேண்டுமென கோரிக்கைவைக்கப்பட்டது. 

நீதிபதி கலையரசன் ஆணையத்தின் விசாரணை தொடர்ந்து நடந்துவருவதாலும், அதன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கைக் கூடாது என இடைக்காலத் தடை உத்தரவு உள்ளதாலும் வழக்கை ஒத்திவைக்க வேண்டுமென கோரிக்கைவைக்கப்பட்டது.

இதனை ஏற்ற நீதிபதி கோவிந்தராஜ், இடைக்கால உத்தரவை மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நீட்டித்து, வழக்கை ஜூன் மாதத்திற்குத் தள்ளிவைத்துள்ளார்.

இதையும் படிங்க: வாக்கு எந்திரங்கள் இருக்கும் மையங்களுக்கு லேப்டாப்புடன் நுழைந்த நபர்கள் - பதறும் திமுக

Last Updated : Apr 16, 2021, 4:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.