ETV Bharat / sports

கூடைப்பந்து தகுதிச்சுற்றில் கஜகஸ்தானை வீழ்த்திய இந்தியா.. 27 ஆண்டுகள் கழித்து வரலாற்று சாதனை! - INDIA KAZAKHSTAN BASKET BALL MATCH

ஆசிய கோப்பை கூடைப்பந்து தகுதிச்சுற்றில் கஜகஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், 88-69 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி இந்தியா சாதனை படைத்துள்ளது.

Asia Cup Basket Ball Qualifiers
Asia Cup Basket Ball Qualifiers (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 26, 2024, 12:03 PM IST

சென்னை: ஆசிய கோப்பை கூடைப்பந்து தகுதிச்சுற்றில் கஜகஸ்தான் அணியை இந்தியா, 88-69 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி அசத்தல் வெற்றியை பதிவு செய்து, புள்ளி பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. இதன் மூலம் 27 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வரலாறு சாதனை படைத்துள்ளது.

இந்திய கூடைப்பந்து சங்கம் சார்பில், 2025 ஆம் ஆண்டுக்கான சர்வதேச அளவிலான கூடைப்பந்து போட்டி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இரண்டு போட்டிகளை கொண்ட இந்த சுற்றில் முதல் போட்டி நவ.23 நடைபெற்றது. இதில், நேற்று - திங்கட்கிழமை (நவ.25) நடைபெற்ற போட்டியில், உலக தரவரிசையில் 76வது இடத்தில் உள்ள இந்திய அணி, 69 வது இடத்தில் உள்ள கஜகஸ்தான் அணியை எதிர்த்து விளையாடியது.

முதல் கால்பகுதியில் கஜகஸ்தான் அணி சிறப்பாக விளையாடி புள்ளிகளை குவிக்க தொடங்கியது. இந்திய அணியில் அமிஜோத் மற்றும் சஹாஜி தலா 3 புள்ளிகள் எடுத்தனர். கஜகஸ்தான் அணியும் 3 புள்ளிகள் எடுத்தனர். இருப்பினும், கஜகஸ்தான் வீரர்கள் 2 புள்ளிகள் அதிகம் எடுத்ததால் முதல் கால்பகுதியில் அந்த அணி 18-க்கு 9 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.

இரண்டாவது கால்பகுதியில் சுதாரித்த இந்திய வீரர்கள், 3 புள்ளிகளை குவித்தனர். கன்வர் சந்து 3 புள்ளிகளை எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இவரோடு சேர்ந்து கேப்டனும், தமிழ்நாட்டு வீரருமான ஹஃபீஸ் மற்றும் அமிஜோத் மேலும் 3 புள்ளிகளை குவிக்க இந்திய அணி 28 புள்ளிளை பெற்றது. இதன் மூலம் முதல் பாதி ஆட்டநேர முடிவில் 37-33 என்ற புள்ளிகள் கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றது.

தொடர்ந்து, இரண்டாவது கால் பகுதியில் இந்திய அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியது. கத்தார் அணிக்கு எதிராக ரீ பவுண்ட் எடுக்க திணறிய இந்திய வீரர்கள், இந்த போட்டியில் அதிக ரீ பவுண்டுகள் எடுத்ததன் மூலமாக எதிரணியின் கவுண்டுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடிந்துள்ளது. இதனையடுத்து, இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் பிரனவ் 2 புள்ளிகளை எடுத்தார். இதனால் மூன்றாவது கால்பாதி முடிவில் இந்திய அணி 63-51 என்ற புள்ளிகள் கணக்கில் தொடர்ந்து முன்னிலை பெற்றது.

இதையும் படிங்க: ஆசிய கோப்பை கூடைப்பந்து தகுதிச் சுற்று: கத்தார் அணியிடம் இந்தியா போராடித் தோல்வி!

இந்தியா வெற்றி: ஆட்டத்தின் இறுதி கால்பாதியிலும் இந்தியாவின் வேகத்தை கஜகஸ்தான் அணியால் தடுத்து நிறுத்த முடியவில்லை. புள்ளிகளை குவிப்பதில் இந்திய வீரர்கள் தீவிரம் காட்டினர். தமிழ்நாட்டின் நட்சத்திர வீரர் பிரனவ் 32 புள்ளிகளை குவித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். அதன்படி, இறுதியில் 88-69 என்ற புள்ளிகள் கணக்கில் இந்திய அணி அபார வெற்றியை பதிவு செய்தது.

ரசிகர்கள் உற்சாகம்: முதல் போட்டியில் கத்தார் அணியிடம் அடைந்த தோல்விக்கு கஜகஸ்தான் அணியிடம் பழிதீர்த்துக்கொண்டது இந்திய அணி. முதல் முறையாக சென்னையில் நடைபெற்ற போட்டியின் முதல் ஆட்டத்தில், இந்திய அணி தோல்வியடைந்ததால் துவண்ட ரசிகர்களை இந்த வெற்றி உற்சாகப்படுத்தியுள்ளது. இந்த போட்டியில் இதுவரை இல்லாத அளவிற்கு 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் கண்டு ரசித்து இந்திய அணியை உற்சாகப்படுத்தினர்.

ஆசிய கோப்பை போட்டிக்கு தகுதி: ஆசிய கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் குரூப் ஈ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்திய அணி, முதல் வெற்றியை ருசித்தது மட்டுமல்லாமல் நான்கு போட்டிகளிலும் சேர்த்து 244 புள்ளிகள் குவித்ததன் காரணமாக கஜகஸ்தான் அணியை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதன் மூலம் இந்திய அணி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய கோப்பை போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை நோக்கி முன்னேறியுள்ளது.

இந்திய அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகள் மீதமுள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி நடைபெறும் போட்டியில் ஈரான் அணியையும், 24ஆம் தேதி நடைபெறும் போட்டியில் கத்தார் அணியையும் எதிர்த்து பலப்பரீட்சை நடத்தவுள்ளது குறிப்பிடதக்கது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.