ETV Bharat / state

என்.எல்.சி.விவகாரத்தில் பாமக உணர்வுப்பூர்வமாக போராடியது - அன்புமணி ராமதாஸ்! - நெய்வேலி என்எல்சி

என்.எல்.சி.விவகாரத்தில் பாமக உணர்வுப்பூர்வமாக போராடி உள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

என்.எல்.சி.விவகாரத்தில் பாமக உணர்வு பூர்வமாக போராடியது : அன்புமணி ராமதாஸ்

author img

By

Published : Aug 13, 2023, 7:53 PM IST

சென்னை: பாமக இளைஞர் சங்கம் மற்றும் மாணவர் சங்கம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து அன்புமணி ராமதாஸ் பேசுகையில்:-

கர்நாடக அரசு அடாவடித்தனம் செய்கிறது: காவிரி நீர் பிரச்சினையில் கர்நாடக அரசு அடாவடித்தனம் செய்து வருகிறது. இது கண்டிக்கத்தக்கது. காவிரி படுகையில் அணைகளில் நிரம்பி 84% நீர் இருக்கிறது. இவ்வளவு தண்ணீர் வைத்துக் கொண்டு கொடுக்காத கர்நாடகா அரசு மீது தமிழக அரசு உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டும்.

இப்போதைய சூழலையே நம்மால் சமாளிக்க முடியவில்லை, மேகதாது அணையை கட்டினால் நமக்கு தண்ணீர் கிடைக்காது. மேலும் இதை நம்பி இங்கு 5 கோடி மக்கள் இருக்கிறார்கள். எனவே தமிழக முதலமைச்சர் அனைத்து கட்சியினரை அழைத்துக் கொண்டு டெல்லி செல்ல வேண்டும். இதற்கு அனைத்து கட்சியும் உறுதுணையாக இருக்க வேண்டும். இதில் அரசியல் செய்ய வேண்டாம்.

என்.எல்.சி. விவகாரத்தில் பாமக உணர்வுப்பூர்வமாக போராடி வருகிறது : என்.எல்.சி. விவகாரம் குறித்து பேசிய அன்புமணி ராமதாஸ், 65 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களை தமிழக அரசு குத்தகைக்கு விட்டுள்ளது. இதில் 40 ஆயிரம் ஏக்கர் நிலங்களை அழித்து விட்டனர். தமிழ்நாட்டில் நெல் உற்பத்தியில் 4வது இடத்தில் உள்ள கடலூர் மாவட்டத்தில், யாரேனும் மூன்றாவது நிலக்கரி சுரங்கம் அமைபார்காள.

இதற்கு ஆதரவளிப்பவர்கள் தமிழ்நாட்டின் எதிரிகள். கடந்த 45 ஆண்டுகளில் விவசாய நிலம் 12% குறைந்துள்ளது இதே நிலைமை சென்றால் நமக்கு எப்படி உணவு கிடைக்கும். முதலமைச்சர் சட்டமன்றத்தில் மூன்றாவது நிலக்கரி சுரங்கம் கொண்டு வரக்கூடாது என அறிவித்தார். ஆனால் விவசாயிகளை அச்சுறுத்தி நிலங்களை பிடுங்குகிறர்கள்.

என்.எல்.சி. இல்லையென்றால் தமிழகம் இருண்டு விடும் என்பது மிகப்பெரிய காமெடியான ஒன்று. என்.எல்.சி. தமிழகத்திற்கு 800 மெகாவாட் மின்சாரம் தருகிறது. அதனை அதிகளவில் ஆந்திராவிற்கும், கர்நாடகாவிற்கும் கொடுக்கின்றன. எங்கள் மண்ணை அழித்து அவர்களுக்கு ஏன் மின்சாரம் தர வேண்டும். மண்ணிற்காக போராடிய எங்கள் கட்சிக்காரர்கள் சிறையில் இருக்கிறர்கள். கஞ்சா விற்பவர்கள் எல்லாம் வெளியே இருக்கிறார்கள்.

சமீபத்தில் பூவுலக நண்பர்கள் ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள். அதில் என்.எல்.சி. சுற்றி வசிக்கும் 90% வீடுகளில் மெர்குரியின் அளவு அதிகமாக உள்ளதால் அங்கே வசிக்க கூடிய பலரும் நோயால் பாதிக்கபட்டுள்ளனர். இதனையறிந்த தமிழக அரசு இதுகுறித்து உடனடியாக ஆய்வு செய்திருக்க வேண்டும்.

ஆனால் பொதுமக்கள் மீது அக்கறை கிடையாது. வேளாண் அமைச்சரின் குடும்பம் அங்குள்ளது அவர்கள் மீது அக்கறை வைத்து செய்திருக்கலாமே. 20 ஆண்டுகளுக்கு முன்பு மின்சாரம் தேவைபட்டது அப்போது மின் பற்றாக்குறை இருந்தது. தற்போது மின்மிகை மாநிலமாக மாறிவிட்டதாக அமைச்சர் சொல்கிறார். அதனால் என்.எல்.சி. தேவையில்லை.

ஆளுநர் சொந்த கருத்தை திணிக்கக் கூடாது : தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற உறுப்பினர்களில் பாஜகவின் 4 எம்.எல்.ஏக்களை தவிர்த்து மற்ற அனைவரும் நீட் தேர்வு வேண்டாம் என நினைக்கின்றனர். அப்படி இருக்கும் போது நீட் மசோதாவில் கையொப்பமிட மாட்டேன் என ஆளுநர் சொல்கிறார். அவர் சொந்த கருத்தை திணிக்கமல் நடுநிலையோடு செயல்பட வேண்டும்.

காசு இருந்தா மட்டும் தான் நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலை உள்ளது. 7.5% இட ஒதுக்கீடு மட்டும் இல்லை என்றால் அரசு பள்ளி மாணவர்கள் விரல் விட்டு எண்ணும் வகையில் தான் இருந்திருப்பார்கள். நீட் பயிற்சி மையங்கள் தமிழ்நாட்டில் மூட வேண்டும் என ஆளுநர் ஒப்புக் கொள்வாரா. நீட் ஏழை பிள்ளைகளுக்கு எதிரானது ஆளுநர் இது போன்ற பேச்சை நிறுத்தி வைக்க வேண்டும் என இவ்வாறு கூறினார்.

இதையும் படிங்க : பழங்குடியின மக்கள் தான் இந்த நாட்டின் உண்மையான உரிமையாளர்கள் - வயநாட்டில் ராகுல் காந்தி பேச்சு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.