ETV Bharat / state

நிவர் புயல்: விமானங்கள் ரத்து - நிவர் புயல்

சென்னை: நிவர் புயல் காரணமாக சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

விமானம்
விமானம்
author img

By

Published : Nov 25, 2020, 8:07 AM IST

நிவர் புயல் காரணமாக சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து இன்று புறப்படும் ஆறு விமானங்களும், அதேபோல் சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு வரும் ஆறு விமானங்களும் என மொத்தம் 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு காலை 8.35 மணி, காலை 11.15 மணி, பகல் ஒரு மணிக்கு சென்னையிலிருந்து புறப்படும் மூன்று விமானங்கள், அதேபோல் தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு பகல் 12.30, மாலை 3.20, 4.55 மணிக்கு வரும் மூன்று விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும், சென்னையிலிருந்து திருச்சிக்கு காலை 7 மணி, இரவு 8.35 மணி புறப்படும் இரண்டு விமானங்களும், திருச்சியிலிருந்து சென்னைக்கு காலை 9.55 மணி, இரவு 11.25 மணிக்கு வரும் இரண்டு விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதோடு சேலத்திற்கு காலை 7.15 மணிக்கு சென்றுவிட்டு, சேலத்திலிருந்து சென்னைக்கு காலை 9.35 மணிக்கு வரும் விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த 12 விமானங்கள் தவிர மேலும் சில விமானங்கள் காலநிலைக்கு தகுந்ததுபோல் ரத்து அல்லது காலதாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.