ETV Bharat / state

நிவர் புயல் காரணமாக ரயில் சேவைகள் ரத்து - முழு விவரம் - southern railway

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை - தஞ்சை ரயில் முழுவதுமாக ரத்துசெய்யப்பட்டுள்ளது. மேலும், டெல்டா மாவட்டங்களுக்குச் செல்லும் 10-க்கும் மேற்பட்ட ரயில்கள் திருச்சியுடன் நிறுத்தப்படுகிறது.

southern railway announcement nivar cyclone
நிவர் புயல் காரணமாக ரயில் சேவைகள் ரத்து - முழு விபரம்
author img

By

Published : Nov 23, 2020, 10:37 PM IST

சென்னை: நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை - தஞ்சை ரயில் முழுவதுமாக ரத்துசெய்யப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களுக்குச் செல்லும் 10-க்கும் மேற்பட்ட ரயில்கள் திருச்சியுடன் நிறுத்தப்படுகிறது. ஒட்டுமொத்தமாக 11 ரயில்கள் முழுவதுமாக அல்லது பகுதி அளவாக ரத்துசெய்யப்படுவதாகத் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, சென்னை எழும்பூர் - தஞ்சை சிறப்பு ரயில் நாளை, நாளை மறுநாள் (நவம்பர் 24 - 25) ஆகிய இரண்டு நாள்கள் முழுவதுமாக ரத்துசெய்யப்பட்டுள்ளது. இதேபோல், சென்னை எழும்பூர் - திருச்சி சிறப்பு ரயில் 24ஆம் தேதி மட்டும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

24ஆம் தேதி பகுதி அளவு ரத்து செய்யப்படும் ரயில்கள்

மைசூரு - மயிலாடுதுறை சிறப்பு ரயில், திருச்சி ரயில் நிலையம் வரை மட்டுமே செல்லும். எர்ணாகுளம் - காரைக்கால் சிறப்பு ரயிலும் 24 ஆம் தேதி திருச்சிவரை மட்டுமே செல்லும். இதனால் திருச்சி - மயிலாடுதுறை, திருச்சி- காரைக்கால் ஆகிய ரயில் சேவைகள் ரத்து செய்யபடும்.

அதேபோல, புவனேஷ்வர் - புதுச்சேரி சிறப்பு ரயில், சென்னை எழும்பூர் ரயில் நிலையம்வரை மட்டுமே இயக்கப்படும். சென்னை எழும்பூர் முதல் புதுச்சேரி வரையிலான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

25ஆம் தேதி பகுதி அளவு ரத்து செய்யப்படும் ரயில்கள்

மயிலாடுதுறை - மைசூரு சிறப்பு ரயில், மயிலாடுதுறையில் இருந்து திருச்சி வரை பகுதி அளவாக ரத்து செய்யப்படுகிறது. காரைக்கால் - எர்ணாகுளம் சிறப்பு ரயில், காரைக்காலில் இருந்து திருச்சி வரை பகுதி அளவாக ரத்து செய்யப்படுகிறது.

கோவை - மயிலாடுதுறை ஜன சதாப்தி சிறப்பு ரயில், திருச்சியில் இருந்து மயிலாடுதுறை வரை பகுதி அளவாக ரத்து செய்யபடுகிறது. மயிலாடுதுறை - கோவை ஜன சதாப்தி சிறப்பு ரயில், மயிலாடுதுறையில் இருந்து திருச்சி வரை பகுதி அளவாக ரத்துசெய்யப்படுகிறது. புதுச்சேரி - புவனேஷ்வர் சிறப்பு ரயில் பகுதி அளவாக புதுச்சேரியில் இருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வரை ரத்துசெய்யப்படுகிறது.

புதுச்சேரி - ஹவுரா அதிவிரைவு சிறப்பு ரயில், புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் வரை ரத்துசெய்யப்படுகிறது.

ரத்துசெய்யப்படும் ரயில்களுக்கான கட்டணம் கிடைக்குமா?

முழுவதுமாக ரத்துசெய்யப்பட்டுள்ள ரயில்களுக்கு முழுக் கட்டணம் திரும்பச் செலுத்தப்படும் என்றும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்களுக்கு தானாக பணம் திரும்பச் செலுத்தப்படும் என்றும் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

மேலும், ரயில் நிலைய முன் பதிவு நிலையங்களில் டிக்கெட் பெற்றவர்கள் 15 நாள்களில் பணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் பகுதி அளவு ரயில் சேவை ரத்துசெய்யப்பட்டதற்கு ஏற்கெனவே நடைமுறையில் உள்ளபடி பணம் திரும்ப செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நெருங்கும் ’நிவர்’ - தற்போதைய நிலை என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.