ETV Bharat / state

'பண மதிப்பிழப்பால் கறுப்புப் பணம் ஒழிக்கப்பட்டுள்ளது' - நிர்மலா சீதாராமன் - நிர்மலா சீதாராமன் பண மதிப்பிழப்பு குறித்து பேச்சு

சென்னை: பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கறுப்புப் பணம் புழக்கத்திலிருந்து ஒழிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Nirmala Sitharaman Speech About Demonetisation Nirmala Sitharaman Speech Chennai Nirmala Sitharaman Speech நிர்மலா சீதாராமன் பேச்சு நிர்மலா சீதாராமன் பண மதிப்பிழப்பு குறித்து பேச்சு சென்னை நிர்மலா சீதாராமன் பேச்சு
Chennai Nirmala Sitharaman Speech
author img

By

Published : Jan 19, 2020, 10:40 PM IST

பொருளாதார நிபுணர் நானி பல்கிவாலாவின் நூற்றாண்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், "ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை அடைவதில் பல்வேறு சவால்கள் உள்ளன. நம் நாட்டுக்கு மிதமான வளர்ச்சித் தேவையில்லை; வேகமான மாற்றம் தேவை. அப்போதுதான் இளைஞர்களுக்கு நம்பிக்கை எழும். ஆறு ஆண்டுகாலமாக ஆட்சியிலிருந்து நீங்கள் (பாஜக அரசு) என்னென்ன மாற்றங்களைச் செய்தீர்கள் என்று கேட்கலாம்.

ஆனால், 2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்தபோது பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டியிருந்தது. அதனால்தான் தாமதம் ஏற்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துதலில் அரசு உறுதியான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று கூறுகிறார்கள். அது மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. நாங்கள் சரியான முறையில் ஜிஎஸ்டியை அமல்படுத்தியுள்ளோம். மாநில அரசுகளுடன் இணைந்து இந்த மாற்றத்தை சாத்தியப்படுத்தியுள்ளோம்.

திவால் சட்டத்தின் மூலம் தொழில்களுக்கு புத்துயிர் கொடுத்துள்ளோம். ஆனால், திவால் சட்டத்தில் நிறுவனங்களின் செயல்பாட்டை நிறுத்த வசதி இருந்தாலும், நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் உள்ளவர்களை மாற்றி அதனைத் தொடர்ந்து செயல்படுத்துவதே திவால் சட்டத்தின் நோக்கம்" எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் கருப்பு பணம் புழக்கத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்டுள்ளது என்றார். அனைத்து மத்திய வங்கிகளும் ரூபாய் நோட்டின் காலகட்டத்தை பற்றி சிந்திக்கும் எனச் சொன்ன அவர், பெரும் மதிப்புடைய ரூபாய் நோட்டுகளின் மதிப்பு நீண்ட நாள்களுக்கு இருந்தததாகவும் சுட்டிக்காட்டினார்.

இதனால், ரூபாய் நோட்டுகள் வெளியே வராமல், பணப் பரிவர்த்தனைகள் சட்டவிரோதமாக நடத்தப்படுவதால் உள்நாட்டு மொத்த உற்பத்தி மதிப்பீடுகளும் குறைவாகத் தெரிந்தததாகவும் நிர்மலா சீதாராமன் எடுத்தியம்பினார்.

பண பரிவர்த்தனைகள் வங்கிகள் மூலம் நடைபெற வேண்டிய சூழ்நிலை இருந்தததாக தெளிவுபடுத்திய அவர், இதற்காகவே பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தார். இதன் பலனாக நாட்டில் மின்னணு பணப் பரிவர்த்தனைகள் அதிகரித்தது என்றார். இதனை மிக விரைவில் மக்கள் ஏற்றுக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க:

பொதுத்துறை வங்கித் தலைவர்களுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை

Intro:Body:சென்னை-

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் கருப்பு பணம் புழக்கத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நிபுணர் நானி பல்கிவாலாவின் நூற்றாண்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை அடைவதில் பல்வேறு சவால்கள் உள்ளன. நம் நாட்டுக்கு மிதமான வளர்ச்சி தேவையில்லை, வேகமான மாற்றம் தேவை, அப்போதுதான் இளைஞர்களுக்கு நம்பிக்கை எழும். 6 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த நேரத்தில் நீங்கள் மிகப் பெரிய மாற்றங்களைச் செய்திருக்கலாம் என்று கேட்கலாம். ஆனால் 2014 இல் நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டியிருந்தது. அதனால்தான் தாமதம் ஏற்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துதலில் அரசு உறுதியான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று கூறுகிறார்கள். அது மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.

நாங்கள் சரியான முறையில் ஜிஎஸ்டியை அமல்படுத்தியுள்ளோம். மாநில அரசுகளுடன் இணைந்து இந்த மாற்றத்தை சாத்தியப்படுத்தியுள்ளோம். திவால் சட்டத்தின் மூலம் தொழில்களுக்கு புத்துயிர் கொடுத்துள்ளோம். திவால் சட்டத்தில் நிறுவனங்களை செயல்பாட்டை நிறுத்த வசதி இருந்தாலும், நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் உள்ளவர்களை மாற்றி அதனை தொடர்ந்து செயல்படுத்துவதே திவால் சட்டத்தின் நோக்கம்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் கருப்பு பணம் புழக்கத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து மத்திய வங்கிகளும் ரூபாய் நோட்டின் காலகட்டத்தை பற்றி சிந்திக்கும். பெரும் மதிப்புடைய ரூபாய் நோட்டுகளின் மதிப்பு நீண்ட நாட்களுக்கு இருந்தது. இதனால் அவை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது, அவை வெளியே வராமல் இருந்தது. பணப் பரிவர்த்தனைகள் சட்டவிரோதமாக நடத்தப்படுவதால் ஜிடிபி மதிப்பீடுகளும் குறைவாக தெரிந்தது. இதனால் பண பரிவர்த்தனைகளை வங்கிகள் போன்ற அமைப்புக்குள் வரவேண்டிய தேவை இருந்தது. இதற்காகவே பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் துணை பலனாக நாட்டில் மின்னணு பணப் பரிவர்த்தனைகள் அதிகரித்தது, இதனை மிக விரைவில் மக்கள் ஏற்றுக்கொண்டனர் என்று கூறினார். Conclusion:visuals in live kit
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.