ETV Bharat / state

சிறப்பு விமானத்தில் சென்னை வந்த 19 பேருக்கு கரோனா!

சென்னை: வெளிநாடுகளிலிருந்து சிறப்பு விமானத்தில் சென்னை வந்த 19 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ninteen members who came on special test corona positive

author img

By

Published : Jul 10, 2020, 11:26 PM IST

கரோனா தொற்றுக்கு முன்பாக வெளிநாடுகளில் இருந்தவர்கள் ஊரடங்கு உத்தரவினால் இந்தியாவிற்குத் திரும்பமுடியாமல் கடும் அவதிக்குள்ளானார்கள்.

இந்நிலையில், மே மாதம் 7ஆம் தேதி முதல் வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்களை தாயகம் அழைத்து வர மத்திய அரசு 'வந்தே பாரத்' என்ற திட்டத்தை தொடங்கியது.

இதைத்தொடர்ந்து, சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு முனையத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து, மலேசியா, துபாய், ஜப்பான், கொரியா, மியான்மார், மஸ்கட், பிலிப்பைன்ஸ் போன்ற 20 நாடுகளில் இருந்து 27 ஆயிரத்து 754 பேர் வந்தனர். இவர்களுக்கு விமான நிலையத்தில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.

ninteen members who came on special test corona positive
சிறப்பு விமானத்தில் சென்னை வந்த 19 பேருக்கு கரோனா

கரோனா தொற்று இல்லாமல் 14 நாள் தங்கியிருந்தவர்கள் தங்கள் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். 515 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 252 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

இந்நிலையில் முகாமில் தங்கியிருந்தவர்களுக்கு மீண்டும் செய்யப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் இலங்கையில் இருந்து வந்த நான்கு பேர், ஒமன், ரஷ்யா ஆகிய நாடுகளில் இருந்து வந்த தலா மூவர், கிர்கிஸ்தான், கத்தார் ஆகிய நாடுகளில் இருந்து வந்த தலா இருவர் ஆர்மேனியா, கென்யா, குவைத், சவூதி அரேபியா, வளைகுடா நாடுகள் ஆகியவற்றில் இருந்து வந்த தலா ஒருவர் என 19 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

இவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதையடுத்து வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் கரோனா பாதிப்பு ஏற்பட்டோரின் எண்ணிக்கை 534 ஆக உயர்ந்தது. அதேபோல் சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்திற்கு பல்வேறு நகரங்களில் இருந்து வந்த 1,235 விமானங்களில் 75 ஆயிரத்து 444 பேர் வந்துள்ளனர்.

இவர்கள் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். உள்நாட்டு முனையத்திற்கு வந்தவர்களில் மேலும் இருவருக்கு தொற்று ஏற்பட்டது. இதனால் உள்நாட்டு முனையத்திற்கு வந்தவர்களில் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 161 ஆக உயர்ந்தது.

இதையும் படிங்க... தமிழ்நாட்டில் இன்று 3680 பேருக்கு கரோனா தொற்று உறுதி!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.