ETV Bharat / state

'நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது சட்டவிரோதம்' - நீதிமன்றம் கண்டனம் - சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை தடுக்காத பொதுப்பணித்துறை செயலாளர் உள்ளிட்ட அலுவலர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக  பதிவு செய்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
author img

By

Published : May 17, 2019, 11:07 PM IST

Updated : May 17, 2019, 11:30 PM IST

தமிழ்நாட்டில் எதிர்காலத் தேவையை கருத்தில் கொண்டு நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையில் தனியார் குடிநீர் உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சுவதற்கு அரசிடமிருந்து தடையில்லா சான்று கட்டாயம் பெற வேண்டும் என்று தமிழக அரசு கடந்த 2014ஆம் ஆண்டு அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து 75 குடிநீர் (கேன் வாட்டர்) நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், கடந்தாண்டு அக்டோபர் மாதம் 3ஆம் தேதி பரபரப்பு தீர்ப்பு வழங்கி தமிழக மக்களின் அவல நிலையை எடுத்துரைத்தார்.

சென்னை உயர்நீதிமன்றம்
தண்ணீர் பிரச்னை

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும், ‘தண்ணீர் பஞ்சத்தினால் மக்கள் கடுமையாக அவதிப்படுவதாகவும், சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது குறித்து பொதுமக்கள் புகார் செய்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று செய்திகள் வெளிவந்தன. செய்தியின் எதிரொலியாக சென்னை உயர்நீதிமன்றம் தமிழக பொதுப்பணித்துறை செயலாளர், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தலைவர், மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் மண்டல இயக்குனர், பொதுப்பணித்துறை தலைமை என்ஜினீயர் ஆகியோர் மீது தாமாக முன்வந்து அவமதிப்பு வழக்கை பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை ஒழுங்குப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? தனியார் நிலத்தில் அனுமதியின்றி சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? ஏரி, குளம், விவசாய நிலம், தனியார் நிலம் ஆகியவற்றில் இருந்து சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது குறித்து பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்பதற்கு பொதுப்பணித்துறை செயலாளர் உள்ளிட்டோர் விளக்கம் அளிக்க வேண்டும். இந்த வழக்கை வருகிற 20-ஆம் தேதி விசாரணைக்கு எடுக்கப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை தடுக்காத பொதுப்பணித்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக  பதிவு செய்து 20-ந்தேதிக்குள் பதில் அளிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் எதிர்காலத் தேவையை கருத்தில் கொண்டு நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையில் தனியார் குடிநீர் உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனங்கள்  நிலத்தடி நீரை உறிஞ்சுவதற்கு அரசிடமிருந்து தடையில்லா சான்று கட்டாயம் பெற வேண்டும் என்று  தமிழக அரசு கடந்த 2014-ம் ஆண்டு அரசாணை பிறப்பித்தது. 

இதை எதிர்த்து  75 குடிநீர் (கேன் வாட்டர்)  நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன. 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 3-ந்தேதி பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்.

அதில், ‘தண்ணீர் இல்லாமல் உலகில் எந்த ஒரு ஜீவராசிகளும் வாழ முடியாது. தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் அதலபாதாளத்திற்கு சென்று விட்டது. ஆனால் நிலத்தில் உள்ள தண்ணீரை சட்டவிரோதமாக திருடி, அவற்றை ரசாயண மாற்றம் செய்து வணிக ரீதியில் விற்பவர்கள் மீது  அரசு கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.
நிலத்தில் இருந்து உறிஞ்சப்படும் நிலத்தடி நீரின் அளவை அளவீடு செய்வதற்காக ‘ப்ளோ-மீட்டர்’ பொருத்தாத நிறுவனங்களுக்கு தடையில்லாச் சான்று அரசு வழங்கக்கூடாது. 

வணிக ரீதியில் தேசத்தின் சொத்தான நிலத்தடி நீரை சட்டவிரோதமாக  திருடுபவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 379-ன் கீழ் (திருட்டு) வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ப்ளோ மீட்டர் பொருத்தப்பட்ட பிறகும், வரையறுக்கப்பட்ட அளவைத்தாண்டி தண்ணீர் உறிஞ்சப்படுகிறதா? என்பதை கண்காணிக்க மாவட்ட கலெக்டர்கள், சிறப்பு கண்காணிப்பு குழுவை உருவாக்க வேண்டும். இந்த உத்தரவை அமல்படுத்தி விட்டு அதுதொடர்பான அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்யவேண்டும்’ என்று நீதிபதி கூறியிருந்தார். 

இந்த நிலையில், தனியார் டி.வி சேனல்கள், பத்திரிகைகளில், ‘தண்ணீர் பஞ்சத்தினால் மக்கள் கடுமையாக அவதிப்படுவதாகவும், மறுபுறம் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் திருடப்பட்டு, அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது குறித்து பொதுமக்கள் புகார் செய்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை’  என்று விரிவான செய்திகளை வெளியிட்டன. 

இதை பார்த்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், ‘தமிழக பொதுப்பணித்துறை செயலாளர், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தலைவர், மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் மண்டல இயக்குனர், பொதுப்பணித்துறை தலைமை என்ஜினீயர் ஆகியோர் மீது தாமாக முன்வந்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கை பதிவு செய்தார். 

பின்னர், அதுதொடர்பாக நீதிபதி பிறப்பித்த உத்தரவில், நிலத்தடி நீர் கொள்ளை அடிக்கப்படுவதையும், சட்டவிரோதமாக எடுக்கப்படும் நிலத்தடி நீர் பெரும் தொகைக்கு விற்பனை செய்யப்படுவதையும் அதிகாரிகள் தடுக்கவில்லை என்று டி.வி. மற்றும் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன. 

ஏற்கனவே இந்த ஐகோர்ட்டு 3-10-2019என்று பிறப்பித்த உத்தரவு நகல் அனைத்து அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவின் அடிப்படையில் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுப்பவர்கள் மீது திருட்டு வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. 

ஆனால் நிலத்தடி நீர் திருடப்படுவது குறித்து பொதுமக்கள் புகார் செய்தும், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

எனவே, பொதுப்பணித்துறை செயலாளர் உள்ளிட்டோர் மீது தாமாக முன்வந்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கை பதிவு செய்கிறேன். அவர்கள் கீழ் கண்ட கேள்விகளுக்கு பதில் அளித்து மனு தாக்கல் செய்யவேண்டும். நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை ஒழுங்குப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? தனியார் நிலத்தில் அனுமதியின்றி சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? ஏரி, குளம், விவசாய நிலம், தனியார் நிலம் ஆகியவற்றில் இருந்து சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது குறித்து பொதுமக்கள்  கொடுத்த புகாரின் அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? 
விவசாயத்துக்காக இலவசமாக கொடுக்கப்படும் மின்சாரத்தை பயன்படுத்தி நிலத்தடி நீரை உறிஞ்சி, அதை அதிக விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? முறையான அனுமதியின்றி ஆழ்துளை கிணறுகள் அமைத்து நிலத்தடி நீரை உறிஞ்சுபவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? 
 
இந்த நீதிமன்றம் கடந்த 3-10-2109 அன்று பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாததற்காக  செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது கோர்ட்டு அவமதிப்புச் சட்டத்தின் கீழ் ஏன் தண்டனை வழங்கக்கூடாது? என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும். இந்த வழக்கை வருகிற 20-ந்தேதி (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுக்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

Send from my iPhone

Last Updated : May 17, 2019, 11:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.