ETV Bharat / state

மழை நீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து செய்தி தொலைக்காட்சி ஊழியர் பலி; முதலமைச்சர் இரங்கல் - முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னையில் மழை நீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்த தனியார் செய்தி தொலைக்காட்சி ஊழியர் உயிரிழந்துள்ளார். அதற்கு முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Etv Bharatமழை நீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து செய்தி தொலைக்காட்சி ஊழியர் பலி

author img

By

Published : Oct 23, 2022, 7:38 PM IST

சென்னை: கந்தன்சாவடி பகுதியைச் சேர்ந்தவர், முத்துகிருஷ்ணன்(24). இவர் தனியார் செய்தித்தொலைக்காட்சியில் எடிட்டராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு பணி முடித்துவிட்டு ஈக்காட்டுத்தாங்கலில் இருந்து நடந்துசென்று கொண்டிருந்தார்.

அப்போது காசி திரையரங்கம் அருகே மழை நீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து உடம்பில் கம்பி குத்தியதில் படுகாயம் அடைந்துள்ளார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் மயக்க நிலையில் இருந்த முத்துகிருஷ்ணனை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நேரில் சென்று பார்த்து உரிய சிகிச்சை அளிக்குமாறு அறிவுறுத்தினார். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த முத்துகிருஷ்ணன் சிகிச்சைப்பலனின்றி இன்று உயிரிழந்தார். இது குறித்து எம்ஜிஆர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் ஆங்காங்கே நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தின் அருகே முறையாக தடுப்புகள் அமைக்க வேண்டும் எனவும்; பெயர்ப் பலகைகள் வைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

  • புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலக செய்தி பிரிவில் செய்தியாளராக பணியாற்றிய திரு. முத்துகிருஷ்ணன் அவர்கள் உயிரிழந்ததையடுத்து மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். pic.twitter.com/kdQhKOd1BY

    — CMOTamilNadu (@CMOTamilnadu) October 23, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்நிலையில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த முத்துகிருஷ்ணன் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சமும், பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதித் திட்டத்தின்கீழ் ரூ. 3 லட்சமும் என 5 லட்ச ரூபாய் நிவாரணம் ஆக அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: காமராஜரை பற்றி அவதூறு; ஆர்.எஸ். பாரதியை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.