இன்று முதல் மதிப்பெண் பட்டியல் வாங்க மாணவர்களுக்கு அனுமதி
தற்காலிக மதிப்பெண் பட்டியலை பெற இன்று (ஜூலை 24) முதல் ஜூலை 30ஆம் தேதி வரை மாணவர்கள் பள்ளிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Realme 6i இன்று இந்தியாவில் அறிமுகம்
ரியல்மி நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனான Realme 6i-ஐ இன்று இந்தியாவில் அறிமுகம் செய்கிறது.
பிளஸ் 2 மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளுக்கான மறுகூட்டல், விடைத்தாள்களை பெறுவது உள்ளிட்டவற்றுக்கு இன்று முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக இன்று முதல் ஜூலை 30ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சுஷாந்த் சிங்கின் கடைசி திரைப்படம் வெளியாகிறது
மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் நடித்த ‘தில் பேச்சாரா’ இன்று டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது. இதற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். சுஷாந்த் ரசிகர்கள் இப்படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானி வாக்குமூலம்
பாபர் மசூதி இடிப்பு வழக்கு தொடர்பாக பாஜக மூத்த தலைவர் அத்வானி இன்று (ஜூலை 24) வாக்குமூலம் அளிக்க வேண்டும் என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் அத்வானி வாக்குமூலம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.