ETV Bharat / state

புதிய மாவட்டங்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் நியமனம் - தமிழ்நாடு அரசு! - புதிய மாவட்ட ஆட்சியர்கள் நியமனம்

சென்னை: புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஐந்து மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட ஆட்சியர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

g.o
author img

By

Published : Nov 15, 2019, 6:02 PM IST

தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஐந்து மாவட்டங்களுக்கு, மாவட்ட ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திருநெல்வேலியைப் பிரித்து தென்காசியையும், காஞ்சிபுரத்தைப் பிரித்து செங்கல்பட்டையும், விழுப்புரத்தைப் பிரித்து கள்ளக்குறிச்சியையும், வேலூரைப் பிரித்து ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் என புதிய ஐந்து மாவட்டங்களை அண்மையில் தமிழ்நாடு அரசு உருவாக்கி அரசாணை வெளியிட்டது.

அதனடிப்படையில், அந்த மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட ஆட்சியர்கள் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, தென்காசி மாவட்டத்திற்கு ஜி.கே. அருண் சுந்தரும், ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு எஸ். திவ்யதர்ஷ்னியும், திருப்பத்தூர் மாவட்டத்திற்கு எம்.பி. சிவனருளும், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஏ.ஜான் லூயிஸும், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு கிரண் குர்ராலாவும் மாவட்ட ஆட்சியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:

புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு காவல் கண்காணிப்பாளர்கள் நியமனம் - தமிழ்நாடு அரசு!

Intro:Body:

New District Collectors Appointment 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.