ETV Bharat / state

வண்டலூரில் சிங்கத்திற்கு புதிய வகை தொற்று பாதிப்பு - புதிய வகை தொற்று

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஒரு சிங்கத்திற்கு கெனனன் டிஸ்டம்பர் வைரஸ் (CDV) என்ற புதிய வகை வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

வண்டலூரில் சிங்கத்திற்கு புதிய வகை தொற்று பாதிப்பு

author img

By

Published : Jun 12, 2021, 3:01 PM IST

சென்னை: இது தொடர்பாக அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் மூன்று சிங்கங்கள், நான்கு புலிகளின் சளி மாதிரிகள் இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் (IVRI) பெய்ரேலிக்கு கரோனா பரிசோதனைக்காக ஜுன் 4 ஆம் தேதி அனுப்பிவைக்கப்பட்டது.

ஆய்வுக்கு பிறகு அந்நிறுவனம் ஜுன் 9 ஆம் தேதி அனுப்பிய அறிக்கையின்படி நான்கு புலிகள், ஒரு சிங்கத்தின் மாதிரிகள் நெகடிவ் என்றும், இறந்த நீலா எனும் சிங்கத்தையும் சேர்த்து 2 பெண் சிங்கங்களுக்கு கரோனா பாசிடிவ் என கண்டறியப்பட்டது. அதே நிறுவனம் இரண்டாம் அலை நோய்கிருமிகள் இருக்கிறதா என ஆய்வு செய்ததில், இரண்டு சிங்கங்களுக்கு சிறிதளவு பாசிடிவ் கெனனன் டிஸ்டம்பர் வைரஸ் (CDV) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மீதமுள்ள 5 மாதிரிகள் நெகடிவ் என முடிவுகள் வந்துள்ளன.

இந்த நிறுவனம் பாசிடிவ் எனும் முடிவுகள் வந்த விலங்குகளுக்கு மனிதர்களுக்கு வருவது போல இரண்டாவது நிலை தொற்று பொதுவானது என தெரிவித்துள்ளது.

வண்டலூரில் சிங்கத்திற்கு புதிய வகை தொற்று பாதிப்பு
வண்டலூரில் சிங்கத்திற்கு புதிய வகை தொற்று பாதிப்பு

CDV தொற்று உறுதி செய்யப்பட்ட சிங்கம் இதுநாள் வரை எந்த அறிகுறியும் இல்லாது ஆராக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் உள்ளது. நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிங்கத்தை தனிமைப்படுத்தி தீவிர கண்காணிப்புடன் தொற்று அறிகுறிகள் உள்ளதா என கண்டறியப்படுகிறது. இதனை உறுதி செய்ய சிங்கத்தின் மாதிரிகள் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வண்டலூர் பூங்காவைச் சுற்றிவரும் கரோனா; 2 சிங்கங்கள் கவலைக்கிடம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.