ETV Bharat / state

தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் புதிய போக்குவரத்து மாற்றங்கள்..! வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு தர வேண்டுகோள்..!

Tambaram GST road: தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் வாகன போக்குவரத்தை எளிதாக்கவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் மாநகர போக்குவரத்துக் காவல் துறையால் புதிய போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் புதிய போக்குவரத்து மாற்றங்கள்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 9, 2023, 10:56 PM IST

சென்னை: தாம்பரம் மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வாகன போக்குவரத்தை எளிதாக்கவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் தாம்பரம் மாநகர போக்குவரத்துக் காவல் துறையால், ஜிஎஸ்டி சாலை - சரவணா ஸ்டோர்ஸ் சந்திப்பு மற்றும் ஜிஎஸ்டி சாலை - பல்லாவரம் நகராட்சி சந்திப்புகளில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இன்று (நவ. 9) முதல் சோதனை அடிப்படையில் செயல்படுத்தி உள்ளது.

ஜிஎஸ்டி சாலை சரவணா ஸ்டோர் சந்திப்பு: ஜிஎஸ்டி சாலையில் பல்லாவரத்தில் இருந்தும், ரேடியல் சாலையில் இருந்தும் வரும் வாகனங்கள் குரோம்பேட்டை சரவணா ஸ்டோர் சந்திப்பில் U Turn செய்து சென்னைக்கு செல்லவும், அதேபோல் தாம்பரத்தில் இருந்து பல்லாவரம் நோக்கி வரும் வாகனங்கள், குரோம்பேட்டை சரவணா ஸ்டோர் சந்திப்பில் U Turn செய்து தாம்பரம் நோக்கி செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

அதற்கு பதிலாக, பல்லாவரத்தில் இருந்து வரும் வாகனங்கள் MIT மேம்பாலம் வழியாக ஜிஎஸ்டி சாலையில் திரும்பி சென்னைக்கு செல்லலாம். மேலும் தாம்பரம் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள், திருநீர்மலை மேம்பாலம் சென்று திரும்பி, மீண்டும் தாம்பரம் நோக்கி செல்லலாம் என வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ஜிஎஸ்டி சாலை பல்லாவரம் நகராட்சி சந்திப்பு: ஜிஎஸ்டி சாலையில் கிண்டி, பல்லாவரத்தில் இருந்தும், ரேடியல் சாலையில் இருந்தும் வரும் வாகனங்கள், பல்லாவரம் நகராட்சி சந்திப்பில் U Turn செய்து சென்னைக்கு செல்லவும், வலதுபுறம் திரும்பி பல்லாவரம் நகராட்சி சாலைக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல் தாம்பரத்தில் இருந்து பல்லாவரம் நோக்கி வரும் வாகனங்கள் பல்லாவரம் நகராட்சி சந்திப்பில் U Turn செய்து தாம்பரம் நோக்கி செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதற்கு பதிலாக பல்லாவரத்தில் இருந்து வரும் வாகனங்கள் MIT மேம்பாலம் வழியாக, ஜிஎஸ்டி சாலை திரும்பி சென்னைக்கு செல்லலாம்.

தாம்பரம் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் திருநீர்மலை மேம்பாலம் சென்று திரும்பி, மீண்டும் தாம்பரம் நோக்கி செல்லலாம் என போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் போக்குவரத்து போலீசார் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தீண்டாமை வேலி ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.