சென்னை: பொறியியல் படிக்கும் மாணவர்களுக்குப் புதிய பாடத்திட்டத்தை நடப்பு கல்வியாண்டிலேயே அண்ணா பல்கலைக்கழகம் அமல்படுத்தியுள்ளது. முதல் 3 செமஸ்டர்களுக்கு, தமிழர் மரபு, அறிவியல் தமிழ், தொழில் வளர்ச்சி, ஆங்கில ஆய்வகம், தொடர்பு ஆய்வகம், அந்நிய மொழி ஆகிய 5 புதிய பாடங்களும் அறிமுகமானது முதற்கட்டமாக 2-ம் ஆண்டு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
3-ம் ஆண்டு, இறுதியாண்டு மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டம் விரைவில் வெளியிடப்படும் எனவும்
அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதில் அறிவியல், தமிழ், தமிழர் மரபு, வெளிநாட்டு மொழி, தொழில் சார்ந்த மேம்பாடு ஆகிய பாடப்பிரிவுகள் நடப்பு கல்வியாண்டில் புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
பொறியியல் படிப்பில் இத்தகைய தலைப்புகளில் பாடங்கள் அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். மாணவர்கள் பொறியியல் படிப்பினைக் கடந்து தங்கள் பண்பாடு, மொழி, கலாசாரம் ஆகியவற்றைப் புரிந்து கொள்ளும் வகையில் இத்தகைய படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கன்னியாகுமரி அருகே அரசு பேருந்துகளை சிறை பிடித்த மாணவர்கள்.. சாலைப் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை