ETV Bharat / state

'கரோனா பரவலைக் கட்டுப்படுத்த புதிய உத்திகளை கையாள்க'- ராமதாஸ்

சென்னை: தமிழ்நாட்டில் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தாவிட்டால் நிலைமை மிகவும் மோசமாகிவிடும். இதை உணர்ந்து புதிய உத்திகளையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

New strategies must be employed to control spread of corona said pmk founder Ramadoss

author img

By

Published : Apr 23, 2021, 5:15 PM IST

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவின் தினசரி கரோனா தொற்று எண்ணிக்கை 3.32 லட்சமாகவும், தமிழ்நாட்டின் தினசரி கரோனா தொற்று எண்ணிக்கை 12 ஆயிரத்து, 652 ஆகவும் அதிகரித்திருப்பது அச்சத்தையும், கவலையையும் அளிக்கிறது. ஒரு மருத்துவராக நிலைமையின் தீவிரத்தை நன்றாக உணர்ந்து கொள்ள முடிகிறது. நிலைமையை கட்டுப்படுத்த வேண்டுமானால் அதிரடியாக சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஒரே நாளில் 3.32 லட்சம் பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகின்றனர் என்பது எளிதில் கடந்து போகக் கூடிய விஷயம் அல்ல. மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், குஜராத், டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. மகாராஷ்டிராவில் ஒவ்வொரு நாளும் 60 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களும், மற்ற மாநிலங்களில் சராசரியாக 25 ஆயிரத்திற்கு மேற்பட்டோரும் நோய்த் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.

நிலைமையை சமாளிக்க ராணுவ விமானங்களில் ஆக்சிஜன் வண்டிகள் ஏற்றப்பட்டு டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதும் நிலைமை எவ்வளவு மோசமாக சென்று கொண்டிருக்கிறது என்பதை உணர்த்துகின்றன. உச்சநீதிமன்றமும், சென்னை உள்ளிட்ட உயர்நீதிமன்றங்களும் இதை உணர்ந்து உரிய அறிவுரைகளையும், எச்சரிக்கைகளையும் வழங்கி வருகின்றன. மத்திய, மாநில அரசுகள் ஆபத்தான சூழலை உணர்ந்து செயல்பட வேண்டும்.

வட மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழ்நாட்டின் நிலைமை ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது என்றாலும் கூட, நிலைமை மோசமாகிவிடாமல் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழ்நாட்டில் நேற்றைய நிலவரப்படி ஒரு லட்சத்து 13,144 பேருக்கு பரிசோதிக்கப்பட்ட நிலையில், 12,652 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் நோய்த்தொற்று விகிதம் 11.18% ஆக அதிகரித்திருக்கிறது. நோய்த்தொற்று விகிதம் கடந்த 50 நாட்களில் 15 மடங்கு அதிகரித்திருக்கிறது.

நோய்த் தொற்று விகிதம் அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்த ஒரே வழி கரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரையும் எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாக கண்டறிந்து, சிகிச்சையளிப்பது தான். அதற்கான முதல் நடவடிக்கையாக கரோனா சோதனைகளை அதிகரிக்க வேண்டும். மற்றொருபுறம் தடுப்பூசிகள் போடும் அளவையும் அதிகரிக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 3 லட்சம் தடுப்பூசிகளாவது போடப்படும் அளவுக்கு கட்டமைப்புகளை விரிவுபடுத்த வேண்டும்.

கரோனா பரவலைத் தடுப்பது அரசின் கடமை மட்டுமே அல்ல. இதற்கான பொறுப்பு மக்களுக்கும் உள்ளது. தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் தான் தமிழ்நாட்டில் கரோனா வேகமாக பரவத் தொடங்கியது என்பதை மறுக்க முடியாது. ஆனால், பொதுமக்கள் வீடுகளை விட்டு அதிகம் வெளியில் வராமலும், முகக்கவசம் அணிவதை முழுமையாக பின்பற்றியும் இருந்திருந்தால் 15 நாட்களில் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தி இருந்திருக்க முடியும்.

அடுத்த 3 வாரங்களுக்குள் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தாவிட்டால் நிலைமை மிகவும் மோசமாகி விடும். இதை உணர்ந்து புதிய உத்திகளையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்த வேண்டும்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.