ETV Bharat / state

கரோனா நோய்த்தொற்று கட்டுப்பாடுகளில் புதிய தளர்வுகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - கோவிட் 19

மக்களின் இயல்பு வாழ்க்கை அவர்களுக்கு முழுமையாகத் திரும்பிட கரோனா நோய்த்தொற்றுப் கட்டுப்பாடுகளில் புதிய சில தளர்வுகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடுகளில் புதிய தளர்வுகள் - மு.க.ஸ்டாலின்

author img

By

Published : Mar 2, 2022, 7:19 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசாணை எண்.75, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 15-02-2022இன் படி, ஒரு சில கட்டுப்பாட்டு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.

ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தின் அறிவிக்கை எண்:40-3/2020/DM-I(A), நாள் 25-02-2022-இல் கரோனா நோய்த்தொற்றைக்கட்டுப்படுத்தத் தேவையான கட்டுப்பாடுகள் மற்றும் பொருளாதாரம் தொடர்பான தளர்வுகள் உட்பட இதர தளர்வுகளை அறிவிக்க அபாயமதிப்பீடு அடிப்படையிலான அணுகுமுறையினை (Risk Assessment Based Approach) கடைபிடிக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்புவதற்காகத் தளர்வுகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்பேரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் காரணமாக கரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதைக்கருத்தில் கொண்டும், மக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாகத் திரும்புவதற்கு ஏதுவாகவும், இதுவரை நடைமுறையிலிருந்து வந்த சமுதாய, கலாசார மற்றும் அரசியல் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை 3-3-2022 முதல் நீக்கப்படுகிறது.

மேலும், தொற்றுப் பரவலைக் கட்டுக்குள் வைத்திட, 3-3-2022 முதல் 31-3-2022 வரை கீழ்க்கண்ட செயல்பாடுகள் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படுகிறது.

1. திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் 500 நபர்களுக்கு மிகாமல் நடத்த அனுமதிக்கப்படும்.

2. இறப்பு சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 250 நபர்களுடன் நடத்த அனுமதிக்கப்படும்.

மக்களின் ஒத்துழைப்பு அவசியம்

மேற்சொன்ன இரண்டு கட்டுப்பாடுகள் தவிர்த்து கரோனாத் தடுப்பு நடவடிக்கைகளுக்காக விதிக்கப்பட்டிருந்த இதர கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்படுகின்றன. மக்களின் வாழ்வாதாரம் கருதி அரசால் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் பொது இடங்களில் தொடர்ந்து கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியினை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் இரண்டு தவணை தடுப்பூசியினை செலுத்திக் கொள்ளுமாறும், மேலும் கரோனா தொற்றிலிருந்து மக்களைக் காத்திட அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க:கார்கீவ்வில் இருந்து உடனே வெளியேறுங்கள் - இந்தியர்களுக்கு அவசர உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.