இதுதொடர்பாக சென்னை ரிப்பன் மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
வீடு வீடாகச் சென்று மாநகராட்சி பணியாளர்கள், சுகாதாரத் துறை பணியாளர்கள் காய்ச்சல் இருக்கிறதா என்பதைக் கண்டறிந்துவருகின்றனர். முதற்கட்டமாக, சென்னையில் 10 மண்டலங்களிலுள்ள 2,500 வீடுகளில் ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர்.
ஆய்வின்போது யாருக்காவது கரோனா அறிகுறி இருந்தால், அதனை முன்கூட்டியே கண்டறிந்து அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதேபோன்று சென்னை மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட 10 லட்சம் இடங்களில், சுமார் 15,000 மாநகராட்சி ஊழியர்கள், தன்னார்வலர்கள் தினமும் ஆய்வு மேற்கொள்வார்கள். அப்போது கரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனே அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்படும்.
இப்பணியை தடையின்றி மேற்கொள்ள மாநகராட்சிக்கு உதவியாக, 30 மருத்துவர்கள் வழங்கப்பட்டுள்ளனர். கூடுதலாக 30 மருத்துவர்கள் வழங்கப்படுவார்கள்.
இதுதவிர சென்னை மாநகராட்சியிடம் தற்போது 100-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உள்ளனர். கரோனாப் பாதிப்பைக் கண்காணிக்க சென்னை மாநகராட்சி சார்பில் செல்போன் செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதனை ஆண்ட்ராய்டு செல்போன்களில் பதிவிறக்கம் செய்யலாம்.
இதன்மூலம் தனிமைப்படுத்தப்பட்டவர்களை நிகழ் நேரத்தில் கண்காணித்து, மருத்துவ உதவி வழங்க முடியும். கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள், அறிகுறிகள் தெரிபவர்கள் செல்ஃபி புகைப்படம் எடுத்து இந்தச் செயலியில் பதிவிட்டால் போதும். எங்கள் அலுவலர்கள், மருத்துவர்கள் அந்த நபரின் இடத்திற்கேச் சென்று உதவுவார்கள்.
இந்தச் செயலி மூலம் அவர்களின் இருப்பிடம் தெரியவரும். தற்போது இந்தச் செயலி மூலம் மருத்துவ உதவி செய்வதிலேயே கவனம் செலுத்திவருகிறோம். அனைத்து பொதுமக்களும் இதனைப் பயன்படுத்தலாம். ஊடகங்கள் இதனைப் பிரபலப்படுத்த வேண்டும். இதன்மூலம் கரோனா பாதிப்பு பரவுவதைத் தடுக்க முடியும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'கோழி இறைச்சி, முட்டை சாப்பிடுவதால் கரோனா பரவாது'