சென்னை: ”புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 2021 திட்டத்தின் கீழ் விபத்தினால் ஏற்படும் அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு, அங்கீகரிக்கப்படாத மருத்துவமனைகளிலும் சிகிச்சை மேற்கொள்ள வழி வகை செய்யப்பட்டுள்ளது.
மேலும் 203 வகையான சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சை நடைமுறைகள் மேற்கொள்வதற்கு தமிழ்நாடு, புதுச்சேரி, திருவனந்தபுரம், பெங்களூரு மற்றும் புது டெல்லி ஆகிய இடங்களில் உள்ள 1,169 அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் கட்டணமில்லா மருத்துவ சிகிச்சைகள் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2021 ஜூன் மாதம் வரையிலான நான்கு ஆண்டுகளில் இரண்டு லட்சத்து 48 ஆயிரத்து 716 பயனாளிகள், 1033.46 கோடி ரூபாய் செலவில் மருத்துவ சிகிச்சைப் பெற்று பயனடைந்துள்ளனர்.
புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டம் 2021இன் கீழ் 1.7.2021 முதல் 31.8.2021 வரை 10,058 பயனாளிகள் 41.67 கோடி ரூபாய் செலவில் மருத்துவ சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர்” என தமிழ்நாடு அரசின் நிதித் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:அண்ணா பிறந்தநாள் -700 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை!