ETV Bharat / state

தமிழ்நாட்டில் இன்று முதல் புதிய தளர்வுகள் அமல் - New lockdown guidelines from today in tamilnadu

கேளிக்கை விடுதிகளில் (Clubs) உடற்பயிற்சிக் கூடங்கள், விளையாட்டுகள் மற்றும் உணவகங்கள் மட்டும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.

New lockdown guidelines from today in tamilnadu

author img

By

Published : Jul 5, 2021, 3:10 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் இன்று (ஜூலை 5) முதல் புதிய தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

இன்று முதல் அமலான தளர்வுகள் பின்வருமாறு:

அரசு, தனியார் தொழில் சார்ந்த பொருட்காட்சி நிகழ்வுகள் நடத்த அனுமதிக்கப்படும். உரிய அழைப்பிதழ் வைத்திருப்பவர்கள் மட்டும் இதற்கு அனுமதிக்கப்படுவார்கள். இந்த அரங்குகளில் பொருட்காட்சி அமைப்பாளர், விற்பனைக் கூடங்களின் உரிமையாளர்கள், பணியாளர்கள் கட்டாயம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை அல்லது இரண்டு தவணைகளில் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

உணவகங்கள், விடுதிகள், அடுமனைகள், தங்கும் விடுதிகள், உறைவிடங்களில் உள்ள உணவகங்கள் காலை 6 மணி முதல் மாலை 8 மணி வரை, உரிய காற்றோட்ட வசதியுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, 50 விழுக்காடு வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு உண்ண அனுமதிக்கப்படும்.

தேநீர் கடைகளில் நிலையான வழிகாட்டு முறைகளைப் பின்பற்றி, ஒரு நேரத்தில் 50 விழுக்காடு வாடிக்கையாளர்கள் தேநீர் அருந்த அனுமதிக்கப்படுவர்.

கேளிக்கை விடுதிகளில் (Clubs) உடற்பயிற்சிக் கூடங்கள், விளையாட்டுகள் மற்றும் உணவகங்கள் மட்டும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.

தகவல் தொழில் நுட்பம், தகவல் தொழில் நுட்ப சேவை நிறுவனங்கள் 50 % பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படும்.

தங்கும் விடுதிகள், உறைவிடங்கள் (Hotels and lodges), விருந்தினர் இல்லங்கள் (Guest Houses) செயல்பட அனுமதிக்கப்படும். அங்குள்ள உணவு விடுதிகள் மற்றும் தங்குமிடங்களில் (dormitory) 50 % வாடிக்கையாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர்.

அருங்காட்சியகங்கள், தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள், அகழ் வைப்பகங்கள் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

உடற்பயிற்சிக்கூடங்கள் மற்றும் யோகா பயிற்சி நிலையங்கள் உரிய காற்றோட்ட வசதியுடன், ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.

டாஸ்மாக் கடைகள் காலை 10.00 மணி முதல் மாலை 8.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

அனைத்து வழிபாட்டுத் தலங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும். திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்கு நடத்த அனுமதி இல்லை.

அனைத்து துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகள், உரிய காற்றோட்ட வசதியுடன், ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

வணிக வளாகங்கள் (Shopping Complex, Malls ) காலை 9.00 மணி முதல் மாலை 8.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். வணிக வளாகங்களில் உள்ள உணவகங்களில் 50% இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும். வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் மற்றும் விளையாட்டுக் கூடங்களுக்கு அனுமதி இல்லை.

மாவட்டத்திற்குள்ளேயும், மாவட்டங்களுக்கிடையேயும், பொதுப் பேருந்து போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி , குளிர் சாதன வசதி இல்லாமலும், 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

SRF/JRF, M.Phil . , Phd . , ஆராய்ச்சி மாணவர்கள் தங்கள் கல்வி சார்ந்த பணிகளை (Educational Project Works) கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர். இவர்களின் கல்வி சார்ந்த பணிகளுக்காக கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் செயல்பட அனுமதிக்கப்படும்.

அண்ணா மேலாண்மைப் பயிற்சி நிலையம், SIRD போன்ற அரசுப் பயிற்சி நிலைய மையங்கள், உரிய காற்றோட்ட வசதியுடன், 50% பயிற்சியாளர்கள் மட்டும் பங்கேற்கும் வகையில், செயல்பட அனுமதிக்கப்படும்.

பொழுதுபோக்கு, கேளிக்கை பூங்காக்கள் (Entertainment, Amusement Parks) 50 % வாடிக்கையாளர்களுடன் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.

முகக்கவசம் அணிதல் , கிருமி நாசினிப் பயன்படுத்துதல் ஆகியவை நிர்வாகத்தால் முறையாகக் கடைபிடிக்கப்பட வேண்டும். இந்தப் பூங்காக்களில் திறந்த வெளியில் நடத்தப்படும் விளையாட்டுகள் மட்டும் அனுமதிக்கப்படும்.

நீர் தொடர்பான விளையாட்டுகளுக்கு ( water sports) அனுமதி இல்லை.

மாவட்டங்களுக்கிடையே பயணிக்க இ - பாஸ், இ-பதிவு நடைமுறை ரத்து செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: மேகதாது அணை திட்டம்: கர்நாடக முதலமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.