சென்னை : தமிழ்நாடு ஆளுநராக பன்வாரிலால் புரோகித் கடந்த நான்கு ஆண்டுகளாக இருந்த நிலையில், தற்போது பஞ்சாப் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் நாகலாந்து மாநிலத்தின் ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் வரும் சனிக்கிழமை தமிழ்நாடு ஆளுநராக பதவி ஏற்க இருக்கிறார். இதையடுத்து, ஆர்.என். ரவி டெல்லியிலிருந்து குடும்பத்துடன் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.
அவரை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், ஏ.வா.வேலு, பொன்முடி, கே.என்.நேரு தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு, காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்று சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தனர்.
இதைத்தொடர்ந்து காவல்துறை சார்பில் இருசக்கர வாகன அணிவகுப்பு நடத்தப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட பின்னர் புதிய ஆளுநராக பதிவி ஏற்கவுள்ள ஆர். என். ரவி, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு காரில் புறப்பட்டுச் சென்றார்.
இதையும் படிங்க : 17ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் - மா.சுப்ரமணியம்