ETV Bharat / state

இந்திய அறிவுசார் அமைப்புகளுக்காக சென்னை ஐஐடியில் புதிய மையம் தொடக்கம்

author img

By

Published : Aug 16, 2022, 3:32 PM IST

இந்திய அறிவுசார் அமைப்புகளுக்காக சென்னை ஐஐடியில் புதிய மையம் தொடங்கப்பட்டுள்ளது.

தொடக்கம்
தொடக்கம்

சென்னை இந்திய அறிவுசார் அமைப்புகளுக்கான மையத்தை சென்னை ஐஐடியின் மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் துறை தொடங்கியுள்ளது. இந்த மையத்தின் மூலம் , இந்தியாவில் கணிதம் மற்றும் வானியல், கட்டிடக்கலை பொறியியல், வாஸ்து மற்றும் சிற்பக்கலை, இந்திய அரசியல் மற்றும் பொருளாதார சிந்தனை, இந்திய அழகியல் மற்றும் இலக்கண மரபுகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட உள்ளது. இந்த மையத்திற்கான நிதியுதவியை இந்திய அரசின் கல்வி அமைச்சகம் சார்பில் அதன் இந்திய அறிவுசார் அமைப்புகள் பிரிவு வழங்கி வருகிறது.

இந்த மையத்தினை இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சில் (ஐசிசிஆர்) தலைவர் வினய் சஹஸ்ரபுத்தே திறந்து வைத்து பேசும்போது, அறிவியல், தொழில்நுட்பம், கட்டிடக் கலை, மொழியியல், கலைகள், கலாச்சாரம், பொருளாதாரம், அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உலகிற்கு இந்தியா ஆற்றிய பங்களிப்பு குறித்து விரிவான ஆய்வு செய்ய வேண்டும். மேலும் அந்த கண்டுபிடிப்புகள் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும் என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஐசிசிஆர் தலைமை இயக்குநர் குமார் துஹின், இந்தியாவின் வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் குறித்து சர்வதேச பார்வையாளர்களிடையே விழிப்புணர்வை உருவாக்க சென்னை ஐஐடியின் இந்திய அறிவுசார் அமைப்புகளுக்கான மையம், இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சில் (ஐசிசிஆர்) ஆகியவை இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என கூறியுள்ளார்.

சென்னை ஐஐடியின் டீன் (குளோபல் என்கேஜ்மெண்ட்) ரகுநாதன் ரெங்கசாமி பேசும்போது, இந்திய அறிவுசார் அமைப்புகள் தொடர்பாக தரமான ஆராய்ச்சியை இம்மையம் மேற்கொள்ள வேண்டும். வெளிநாட்டு மாணவர்கள் இந்தியாவில் கல்வி பயில்வதற்கும், இந்திய கல்விமைய வளாகங்களை சர்வதேச மயமாக்குவதற்கும் உகந்த சூழலை இம்மையம் உருவாக்க வேண்டும் என பேசினார்.

இந்த மையம் இந்திய அறிவுசார் அமைப்புகள் தொடர்பான தரமான ஆராய்ச்சியை இந்த மையம் வெளியிடுவதுடன், கல்விக் கருத்தரங்குகள், மாநாடுகளை நடத்தி கண்டுபிடிப்புகளைப் பரப்புவது இம்மையத்தின் குறிக்கோளாகும். வெளியில் உள்ள அறிஞர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களையும் இணைத்து இந்த ஆராய்ச்சிப் பணிகள் நடைபெறும்.

தொடக்கத்தில் கருப்பொருள் பகுதிகளை வடிவமைத்து, இதுதொடர்பான பாடப்பிரிவுகளை சென்னை ஐஐடி மாணவர்களுக்கு இந்த மையம் வழங்கும். பின்னர், இப்பாடப்பிரிவுகளை என்பிடெல் தளத்தில் விரிவாக வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: காஞ்சியில் காவல் துறையினரின் போதைப்பொருள் விழிப்புணர்வு இருசக்கர வாகனப்பேரணி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.