சென்னை: கடந்த சில வாரங்களாக தொண்டர்களுடன் சசிகலா பேசி வரும் ஆடியோ உரையாடல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறன. கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட ஆடியோக்கள் இதுவரை வெளி வந்துள்ளன. இந்த நிலையில் இன்று (ஜூன்.21) இரண்டு தொண்டர்களிடம் சசிகலா பேசிய ஆடியோகள் வெளியாகி உள்ளன.
"வீரவசனம் பேசி வருபவர்கள் எப்படினு தொண்டர்களுக்கு தெரியும், ஜெயலலிதா வழியில் மீண்டும் அதிமுகவை மீட்டு எடுப்போம். நிச்சயம் வந்துவிடுவேன், தொண்டர்கள் எனக்கு பின்னால் இருந்தால் போதும், அதிமுகவினர் அனைவரும் ஒரே ஜாதி தான். கவலைப்படாமல் இருங்கள், நல்லது நடக்கும்" என பேசியுள்ளார்.
மற்றொரு ஆடியோவில், "இனிமேல் பின்வாங்கப் போவது இல்லை, தனிநபர்களுக்காக கட்சி நடத்துவது தெரிகிறது. என்னால் எந்த பாதிப்பும் வரக்கூடாது என ஒதுக்கி இருந்தேன், இனி அப்படி இருக்க முடியாது" என பேசி உள்ளார்.
இதையும் படிங்க: இன்னைக்கு ஒரு புது ஆடியோ! - தொண்டரிடம் பேசிய சசிகலா