ETV Bharat / state

வரும் 25ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் - சி.பி.எம் அறிவிப்பு! - விடுதலை சிறுத்தை கட்சி

வரும் 26, 27ஆகிய இரண்டு நாட்கள் தமிழ்நாட்டில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக சிபிஐ, சிபிஎம் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் அறிவித்துள்ளன.

வரும் 25 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் - சி.பி.எம் அறிவிப்பு

author img

By

Published : May 23, 2022, 5:26 PM IST

சென்னை தியாகராய நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், "ஒன்றிய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையைக்கண்டித்து ஒன்றிய அரசுக்கு எதிராக இடதுசாரி கட்சிகள் சார்பில், நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் வரும் 25ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட் லிபரேசன் ஆகிய 4 கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர். வரும் 26, 27ஆகிய இரண்டு நாட்கள் தமிழ்நாட்டில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக இக்கட்சிகள் அறிவித்துள்ளன.

பெட்ரோல், டீசல் மீதான வரிக்குறைப்பு பயத்தால் தான் நிகழ்ந்தது: மேலும் 25ஆம் தேதி 31ஆம் தேதி வரை ஒன்றிய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையை மக்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில் வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு பிரசாரம் தமிழ்நாட்டில் நடத்தப்படும். தமிழ்நாட்டில் இடதுசாரிகளோடு விசிகவும் இணைந்து 4 கட்சிகள் கண்டன இயக்கங்களை நடத்த உள்ளோம். இலங்கையில் கொந்தளிப்பு சூழ்நிலை எழுந்திருப்பதால், இங்குள்ள ஆட்சியாளர்களுக்கு அச்சம் எழுந்து, சிறிய அளவில் பெட்ரோல், டீசல் வரியைக் குறைத்துள்ளனர்.

மத்திய அரசு உயர்த்திய செஸ் வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். 'உஜ்வாலா' திட்டத்தில் கொடுக்கும் சிலிண்டர் மானியம் ஒரு 6% பேருக்குத் தான் கிடைக்கும். கரோனா காலத்தில் 7 கோடி இளைஞர்கள் வேலைகளை இழந்துள்ளனர். மத்திய அரசின் தவறான கொள்கையால் பருத்தி விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலையை மாநில அரசு ஏற்கெனவே ரூ.3 குறைத்திருக்கிறது. ஒன்றிய அரசிடம் இருந்து வரக்கூடிய 28,000 ரூபாய் கோடியை வழங்கினால், மாநில அரசே வரியைக் குறைக்கச் சொல்கின்றோம். கடந்த நான்கு ஆண்டுகளில் பலமுறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது" எனக் கூறினார்.

விலைவாசி உயர்வை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும்: இதைத்தொடர்ந்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன், "விலைவாசி உயர்வை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும். ஒட்டகத்தில் சுமையை ஏற்றுவதுபோல் விலைவாசி உயர்வை ஒன்றிய அரசு ஏற்றியுள்ளார்கள். தற்போதைய விலைக்குறைப்பை வரவேற்கிறோம். வரும் 27ஆம் தேதி சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் 4 கட்சித் தலைவர்களும் பங்கேற்போம்" எனத் தெரிவித்தார்.

வரும் 25 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் - சி.பி.எம் அறிவிப்பு
விசிக பங்கேற்பு: இதனைத்தொடர்ந்து பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், "மே 25 - 31 வரை கிராமம்தோறும்; வீடுகள்தோறும் துண்டு அறிக்கைகள் மூலம் இடதுசாரிகளோடு விசிகவினர் இணைந்து பரப்புரை மேற்கொள்ள உள்ளோம். மோடி அரசின் பொருளாதார சரிவு மற்றும் சமூகப் பிளவிற்கு காரணமாக இருக்கிறது. மோடி அரசின் மக்கள் விரோத கொள்கையினை அம்பலப்படுத்த வேண்டும். மே 25 முதல் துண்டு அறிக்கை கொடுக்கத் தொடங்கி விடுவோம்" எனக் கூறினார்.

இதையும் படிங்க : பெட்ரோல், டீசல் விலையை குறைக்கச் சொல்வது தேவையற்ற வாதம் ! - அமைச்சர் சிவசங்கர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.