ETV Bharat / state

’அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் தேசிய பாதுகாப்பு சட்டம்’

சென்னை: அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார் என குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் குற்ற புலனாய்வு டிஜிபி பிரதீப் வி பிலிப் எச்சரித்துள்ளார்.

National Security Act flows through the smuggling of essential goods

author img

By

Published : Apr 8, 2020, 11:40 AM IST

கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தினக்கூலியாக பணிபுரியும் பொதுமக்கள் பலருக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதால், நியாய விலைக் கடைகளில் இலவசமாக கூடுதலாக அரிசி, அத்தியாவசிய பொருட்களை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து இந்தப் பொருட்களை கள்ளச் சந்தைகளில் அதிக விலைக்கு விற்பதற்காக, ரேசன் அரிசியை பதுக்கியும், கடத்தி சென்று விற்பவர்கள் மீது, அத்தியாவசிய பொருட்கள் கடத்தல் தடை சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்படுவர். மேலும், அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் மற்றும் கள்ளசந்தை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்றபுலனாய்வு துறை டிஜிபி பிரதீப் வி பிலீப் தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் -டிஜிபி பிரதீப் வி பிலிப்!

மேலும் அரசு நிர்ணயித்த விலையான முகக்கவசம் ரூபாய் 8, சானிடைசர் 200 மி.லி ரூபாய் 100 ஆகியவைகளை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் அத்தியாவசிய பொருட்கள் கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க...காணொலி மூலம் வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.