கடந்த ஓராண்டாக கணைய புற்றுநோயால் அவதிப்பட்டுவந்த கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கா் நேற்று காலமானார். அவருக்கு வயது 63.
பாரிக்கர் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும், கோவாவில் நான்கு முறை முதலமைச்சராகவும் பதவி வகித்தவர். இந்நிலையில், நேற்றிரவு காலமான பாரிக்கரின் மறைவுக்கு பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
பாரிக்கர் மறைவையொட்டி இன்று நாடு முழுவதும் துக்க தினமாக அனுசரிக்கப்படும் என்றும், நாட்டின் தலைநகர், மாநிலங்களின் தலைநகர்களில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்திருந்தது.
அதன்படி, சென்னை விமானநிலையத்தில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.