ETV Bharat / state

வசந்தபாலனின் 'அநீதி' படப்பிடிப்பு நிறைவு - வேகம் எடுக்கும் இறுதிகட்டப்பணிகள்! - vasanthabalan new movie injustice

இயக்குநர் G.வசந்தபாலனின் அடுத்த படைப்பான 'அநீதி'-யின் படப்பிடிப்பு நிறைவடைந்து, இறுதிகட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

தேசிய விருது பெற்ற இயக்குநர் G.வசந்தபாலனின்‘அநீதி’ படப்பிடிப்பு நிறைவு, இறுதிகட்ட பணிகள் நடைப்பெறுகிறது!

author img

By

Published : May 23, 2022, 6:36 PM IST

சென்னை: 'கைதி', 'மாஸ்டர்' படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த அர்ஜூன்தாஸ் முதன்முறையாக கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். ’சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தில் மாரியம்மாளாக நடித்து பெரும் கவனம் பெற்ற திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் பேசும் 'துஷாரா விஜயன்' கதையின் நாயகியாக நடித்திருக்கிறார்.

விருதுநகரில் தன்னுடன் பள்ளியில் படித்த நண்பர்களான M.கிருஷ்ணகுமார், முருகன் ஞானவேல், வரதராஜன் மாணிக்கம் ஆகியோருடன் இணைந்து அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோஸ் நிறுவனத்தைத் தொடங்கி தயாரிப்பாளராக மாறியுள்ள தேசிய விருது பெற்ற இயக்குநர் G.வசந்தபாலனின் முதல் தயாரிப்பான ’அநீதி’ திரைப்படத்தை அவரே இயக்கியுள்ளதோடு, கதை, திரைக்கதையையும் எழுதியுள்ளார்.

இயக்குநர் வசந்தபாலனால் 'வெயில்' படத்தில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தப்பட்ட ஜி.வி.பிரகாஷ்குமார் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் - வசந்தபாலன் கூட்டணியில் இந்தப் படத்திலும் மனதைத் தொடும் நான்கு இதமான பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

பாடல்களை கார்த்திக் நேத்தா, ஏகாதேசி எழுதியுள்ளனர். வசந்தபாலனின் முந்தைய படங்களில் பாடல்கள் எழுதிய மறைந்த கவிஞர் நா.முத்துக்குமாரின் நட்பின் நினைவாக நா.முத்துக்குமாரின் கவிதைகளிலிருந்து வரிகளைத் தொகுத்து ஒரு திரைப்பாடலுக்கு பயன்படுத்தியுள்ளார். ஜி.வி பிரகாஷ் பாடிய அப்பாடல் இனிமையான காதல் பாடலாக வந்துள்ளது.

நடிக்கும் முக்கிய பிரபலங்கள்: வனிதா விஜயகுமார், 'நாடோடிகள்' பரணி, சுரேஷ் சக்கரவர்த்தி, விஜய் டிவி புகழ் ’அறந்தாங்கி’ நிஷா, காளி வெங்கட், சாரா, அர்ஜூன் சிதம்பரம், இயக்குநர் எஸ்.கே. ஜீவா,இயக்குநர் அருண் வைத்தியநாதன், இயக்குநர் சுப்பிரமணியம் சிவா மற்றும் நாட்டிய கலைஞர் பத்மஸ்ரீ சாந்தா தனஞ்செயன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். தயாரிப்பாளர் J.சதீஷ்குமார் மற்றும் அம்மா கிரியேஷன்ஸ் T.சிவா ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

வெயில், அங்காடித்தெரு, அரவான், காவியத் தலைவன், ஜெயில் என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைக் களங்களில் படங்களை எழுதி இயக்கிய வசந்தபாலன் இப்படத்திலும் வித்தியாசமான கதையமைப்பை வடிவமைத்துள்ளார்.

அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான, வசந்தபாலனின் படைப்பான ‘அநீதி’, ஜூன் மாதம் வெளியாகவுள்ளது. ‘அநீதி’ வெளியீட்டிற்குப் பின் திறமையுள்ள புது இயக்குநர்களை அறிமுகப்படுத்தி படங்களை தயாரிக்கவுள்ளது, அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோஸ் நிறுவனம்.

இதையும் படிங்க:இயக்குநர் வசந்தபாலனின் புது முயற்சி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.