ETV Bharat / state

அதிமுக அமோக வெற்றி! - தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டாட்டம்

சென்னை: விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

muthamilselvan
author img

By

Published : Oct 24, 2019, 5:17 PM IST

தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு அக்டோபர் 21ஆம் தேதி நடைபெற்றது. இந்த இரண்டு தொகுதிகளிலும் அரசியல் கட்சித் தலைவர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்களின் தேர்தல் பரப்புரை மும்முரமாக நடைபெற்றது.

வாக்கு எண்ணிக்கை இன்று காலை எட்டு மணிக்கு தொடங்கிய நிலையில், இரண்டு தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றிபெற்றுள்ளது.

நாங்குநேரியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ரெட்டியார்பட்டி நாரயணன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை 32 ஆயிரத்து 333 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். ரெட்டியார்பட்டி நாராயணன் 95 ஆயிரத்து 377 வாக்குகள் பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் 61 ஆயிரத்து, 932 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

இதேபோல் விக்கிரவாண்டியில் முத்தமிழ்ச்செல்வன் திமுக வேட்பாளர் புகழேந்தியை சுமார் 45 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். முத்தமிழ்ச்செல்வன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 428 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் புகழேந்தி 68 ஆயிரத்து 646 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

நாம் தமிழர் கட்சி விக்கிரவாண்டியில் இரண்டாயிரத்து 913 வாக்குகளும் நாங்குநேரியில் மூன்றாயிரத்து 494 வாக்குகள் பெற்றுள்ளது. மேலும், விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றிபெற்ற அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் வெற்றி சான்றிதழை மாவட்ட தேர்தல் அலுவலரிடம் பெற்றுக்கொண்டார்.

அதிமுக வெற்றிபெற்றதைத் தொடர்ந்து அக்கட்சித் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடிவருகின்றனர். குறிப்பாக அக்கட்சியின் தலைமை அலுவலகமான அம்மா அன்பு மாளிகையில் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டுவருகிறது.

Intro:Body:

Nanguneri #Vikravandi #ADMK 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.