சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 31 ஆண்டுகளுக்கு மேலாக வேலூர் சிறையில் முருகன்
இருந்து வருகிறார். இந்நிலையில், சிறையில் முருகன் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருவதாகவும் இதனால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் முருகனின் மாமியாரும், நளினியின் தாயாருமான பத்மா வழக்கு தொடர்ந்து உள்ளார்.
அதில், தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் தனது மருமகன் முருகனின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். உடல் எடை குறைந்து விட்டதாகவும், முருகன் தற்போது ஆபத்தான நிலையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 32 நாட்களுக்கு மேல் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருவதால் அவருடைய உயிரை காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து சிறைத்துறை அதிகாரி மற்றும் உள்துறை செயலாளருக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு ஒரிரு நாளில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கிறிஸ்தவ வன்னியர்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்க மனு; அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு