ETV Bharat / state

பத்திரிகையாளர் பிரகாஷை கைது செய்யக் கோரி மனு!

சென்னை: இந்து திருமண மந்திரங்களை கொச்சைபடுத்தும் விதமாக பேசிய பிரபல வார இதழின் பத்திரிகையாளரை கைது செய்ய வேண்டும் என, பாஜக மாநில செயலாளர் ஸ்ரீதரன் காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

நக்கீரன் பிரகாஷை கைது செய்ய வேண்டும்
நக்கீரன் பிரகாஷை கைது செய்ய வேண்டும்
author img

By

Published : Aug 1, 2020, 6:45 PM IST

Updated : Aug 1, 2020, 6:53 PM IST

சென்னையில் தனியார் இணைய தொலைக்காட்சியில் பத்திரிகையாளர் பிரகாஷ் இந்து நம்பிக்கையை இழிவுப்படுத்தும் விதமாக பேசியுள்ளார். இதையடுத்து இன்று (ஆகஸ்ட் 1) பாஜக மாநில செயலாளர் ஸ்ரீதரன் காவல் ஆணையரிடம் பத்திரிகையாளர் பிரகாஷை தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யக் கோரி புகார் மனு அளித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் ஸ்ரீதரன் கூறும்போது, "தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த பத்திரிகையாளர் பிரகாஷ் கந்த சஷ்டி கவசம் குறித்தும், இந்து திருமணங்களில் கூறப்படும் மந்திரங்களை கொச்சைப்படுத்தும் விதமாகவும் பேசியுள்ளார். இந்தச் செயல் இந்து மதத்தினர் மனதை புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இதனால் இருபிரிவினரிடையே சாதி மோதல் ஏற்படும் நிலை உள்ளது.

பத்திரிகையாளர் பிரகாஷை கைது செய்ய வேண்டும்

எனவே குறிப்பிட்ட மதத்தினரை பற்றி இழிவாக பேசிய பிரகாஷை தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளேன்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனலை தடை செய்ய கோரி மனு!

Last Updated : Aug 1, 2020, 6:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.