ETV Bharat / state

விஜயை சந்திப்பாரா திருமாவளவன்..? கனிமொழி கொடுத்த நச் பதில்..! - KANIMOZHI

திமுக கூட்டணி, கொள்கை ரீதியான கூட்டணி என்று விசிக தலைவர் திருமாவளவன் தெளிவாக தன்னுடைய நிலைப்பாடை வெளிப்படுத்தியிருக்கிறார் என்று திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார்.

திமுக எம்பி கனிமொழி
திமுக எம்பி கனிமொழி (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 7, 2024, 2:04 PM IST

Updated : Nov 7, 2024, 2:19 PM IST

சென்னை: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் இந்தியா டர்ன்ஸ் பிங்க் (india turns pink) நிறுவனம் இணைந்து நடத்தும் இலவச மார்பக புற்றுநோய் கண்டறிதல் முகாம் துவக்க விழா சென்னை காமராஜர் சாலையில் உள்ள லேடி வெலிங்டன் மாதிரி பள்ளியில் இன்று நடைபெற்றது.

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் செயல் இயக்குனர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பரிசோதனை முகாமை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான மீனவ பெண்கள், ஆசிரியைகள், மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு பரிசோதனை மேற்கொண்டனர்.

முன்னதாக விழா மேடையில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி; ''இது மாணவிகளுக்கான மிக முக்கியமான நிகழ்ச்சி என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இதற்காக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். இன்று லட்சக்கணக்கான பெண்கள் இந்தியாவில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அடுத்த தலைமுறை சேர்ந்த நீங்கள் உங்களின் உடல் நிலையை நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். பெண்கள் தன்னை தானே பார்த்துக் கொள்ள வேண்டும், பாதுகாத்துக் கொள்ள வேண்டும் இதுதான் நம்முடைய முதல் கடமை'' என்றார்.

இதையும் படிங்க: விஜயை ஒரே மேடையில் சந்திப்பாரா திருமாவளவன்?

தொடர்ந்து பேசிய அவர், '' நம்முடைய உடல் மட்டும்தான் கடைசி மூச்சு வரை நம்முடன் இருக்கும். அடிப்படையில் உங்களை நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் பெண்களை மார்பக புற்றுநோயால் நாம் இழந்து கொண்டிருக்கிறோம். பெரும்பாலும் பெண்கள் மார்பக புற்றுநோய் பற்றி அறியாமல் நான்காவது கட்டத்தில் தான் பரிசோதனை செய்கிறார்கள். முதல் நிலையிலேயே இதனை கண்டறிந்தால் இதனை சுலபமாக குணப்படுத்தலாம். இன்று 50 சதவீத பெண்கள் முதல் நிலையிலேயே பரிசோதனை மேற்கொள்ளாத காரணத்தால் தான் உயிரிழக்கிறார்கள்.

இங்கே இருக்கக்கூடிய மாணவிகள் மார்பகப் புற்றுநோய் பற்றி விழிப்புணர்வை வெளியே பரப்ப வேண்டும். உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கற்றுத் தர வேண்டும். இதுதான் மகளுக்கு செய்யக்கூடிய மிகப்பெரிய சீராகும்'' என கூறினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய கனிமொழி கூறுகையில், ''திமுக கூட்டணி, கொள்கை ரீதியான கூட்டணி என்று விசிக தலைவர் திருமாவளவன் தெளிவாக தன்னுடைய நிலைப்பாடை வெளிப்படுத்தியிருக்கிறார். நாட்டின் மதச்சார்பின்மையை காப்பது முக்கிய கொள்கை. இந்தியா கூட்டணியை பிளவுபடுத்த முடியாது. வெற்றி வாய்ப்புகள் மற்றும் எதிர்ப்புகளை வலுவாக வெளிப்படுத்தக்கூடிய கூட்டணி ஆகும். இந்தியா கூட்டணி மிக வலிமையாக உள்ளது'' என்றார்.

மேலும், தமிழ்நாட்டில் நல்லாட்சியை பற்றி அதிமுக பேசுவது நகைச்சுவையாக உள்ளது என விமர்சித்த கனிமொழி, அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு, சென்னையில் நடைபெறும் புத்தக வெளியீட்டு விழாவில், திருமாவளவன், விஜய் பங்கேற்க இருப்பதான கேள்விக்கு, ''கூட்டணி குறித்து தான் நாங்கள் பேச முடியும்.. கூட்டணி தலைவர்கள் எந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள் என்பது எல்லாம் நாங்கள் கண்காணிக்க தேவையில்லை'' என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

Last Updated : Nov 7, 2024, 2:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.