ETV Bharat / health

ப்ரோக்கோலியில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்..எடையை குறைக்க நினைப்பவர்கள் கட்டாயம் சாப்பிடுங்கள்!

ப்ரோக்கோலியில் இருக்கும் சத்துக்கள் மற்றும் அதனை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? என்பதை இந்த செய்தி தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்..

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETVBharat)
author img

By ETV Bharat Health Team

Published : 2 hours ago

முட்டைகோஸ், காலிஃப்ளவர் குடும்பத்தை சேர்ந்த ப்ரோக்கோலி உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் அடக்கியுள்ளது. சூப்பர் ஃபுட்டான ப்ரோக்கோலியை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை பற்றி பார்க்கலாம் வாங்க..

ப்ரோக்கோலியில் இருக்கும் சத்துக்கள்:

  • வைட்டமின் ஏ, சி,கே
  • சோடியம்
  • பொட்டாசியம்
  • கேல்சியம்
  • மெக்னீசியம்
  • பாஸ்பரஸ்
  • புரதம்
  • நார்ச்சத்து

ப்ரோக்கோலி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

  1. உடலுக்கு தேவையான அனைத்து மைக்ரோ நியூட்ரியன்ட்ஸ்களை கொண்டுள்ளது.
  2. இதில் இருக்கும் சல்ஃபோராபேன் (Sulforaphane) எனும் ஆன்டி ஆக்ஸிடன்ட், உடலில் உள்ள தேவையில்லாத கழிவுகளை அகற்றுகிறது. அதுமட்டுமல்லாமல், புற்றுநோய் செல்களை உருவாக்காக்கூடிய ஃபீரி ரேடிகல்ஸ் எனும் நச்சுக்கழிவுகளையும் நீக்கும்.
  3. அனைத்து வகையான புற்றுநோய்கள், குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் மார்பக மற்றும் கர்பப்பை புற்றுநோயிற்கு எதிராக போராடுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  4. நரம்புகளை வலிமையாக்கும் வைட்டமின் கே மற்றும் வைட்டமின் பி இதில் இருக்கிறது. இது நரம்பு மண்டலத்தை பலப்படுத்துவதோடு சீராக வேலை செய்ய உதவுகிறது. நரம்புகளில் உள்ள செல்களை சேதமடையாமல் பார்த்துக்கொள்ளும். நடுக்கம், நரம்புத் தளர்ச்சியால் அவதிப்படுபவர்கள் வாரத்திற்கு மூன்று முறை ப்ரோக்கோலியை சாப்பிட்டு வரலாம்.
  5. சர்க்கரை நோயாளிகள் லோ கிளைசெமிக் இண்டெக்ஸ் (Low glycemic index) கொண்ட உணவுகளை சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். இந்நிலையில், சர்க்கரை நோயாளிகள் ப்ரோக்கோலியை தாரளமாக சாப்பிடலாம். இது இரத்த சர்க்கரையின் அளவை சீராக வைக்க உதவி செய்கிறது.
  6. எலும்பின் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளையும் ப்ரோக்கோலி கொண்டுள்ளது. இவற்றை உட்கொண்டு வருவதால், புதிய எலும்பு திசுக்கள் உற்பத்தியை அதிகரிக்கும். மூட்டு வலி, எலும்பு தேய்மானம், முதுகு வலி போன்ற பிரச்சனைகள் குறையும்.
  7. இதில் உள்ள நார்ச்சத்து உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கும். இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருப்பவர்கள், வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று நாட்கள், ப்ரோக்கோலி சாப்பிட்டடு வர கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறையும்.
  8. செரிமானம் சார்ந்த தொந்தரவுகளான அஜீரணம், அசிடிட்டி, நெஞ்செரிச்சல், வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கு ப்ரோக்கோலி மிகவும் நல்லது. கூடுதலாக, குடலின் இயக்கத்தை சீராக்கி குடல் கழிவுகளை வெளியேற்றும்.
  9. இரத்த குழாயில் கொழுப்புகள் படிவதை தடுக்கிறது. இதனால், இரத்த குழாய் அடைப்பு பிரச்சனை வராது மற்றும் மாரடைப்பு போன்ற பிரச்சனைகளை தடுக்கிறது
  10. ப்ரோக்கோலி உடலில் உள்ள கொழுப்பு செல்களை கரைக்கும். உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு ப்ரோக்கோலி சிறந்த தீர்வு. இதிலுள்ள புரதம் மற்றும் நார்ச்சத்து வயிறு நிரம்பிய உணர்வை கொடுத்து பசியை கட்டுக்குள் வைக்கும்.

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.