ETV Bharat / state

“இந்திய அளவில் மூன்றாம் இடத்தில் தமிழ்நாட்டின் சிறு, குறு தொழில்துறை” -அமைச்சர் தா.மோ அன்பரசன் பேட்டி - TM ANBARASAN ON COIMBATORE SCHEMES

செலவம்பாளையம் கிராமத்தில் 18 கோடி மதிப்பீட்டில் தனியாருடன் இணைந்து தொழிற்பேட்டை அமைக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் தா. மோ. அன்பரசன் சிறு, குறு தொழில்துறையின் வாங்குவோர் விற்போர் சந்திப்பு நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

அமைச்சர்  தா.மோ.அன்பரசன்
அமைச்சர் தா.மோ.அன்பரசன் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 7, 2024, 3:49 PM IST

கோயம்புத்தூர்: கோவை கொடிசியா வளாகத்தில் சிறு, குறு தொழில்துறை சார்பில் "வாங்குவோர் விற்போர் சந்திப்பு" நிகழ்ச்சி மற்றும் கண்காட்சி இன்று மற்றும் நாளை என இரு நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை சிறு, குறு தொழில்துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் தா.மோ.அன்பரசன்,“வாங்குவோர் விற்போர் சந்திப்பு நிகழ்ச்சியில் அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், எகிப்து உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து தொழில் முனைவோர்கள் வந்துள்ளனர். உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவீத பங்களிப்பையும் , நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான பங்கினையும் சிறு, குறு தொழில்கள் தருகின்றன.

புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் வேலை வாய்ப்பும்: உள்நாட்டு உற்பத்தியில் 14% ஏற்றுமதியில், 19.5 சதவீதத்துடன் இந்திய அளவில் மூன்றாம் இடத்தில் தமிழ்நாட்டின் சிறு, குறு தொழில்துறை இருக்கிறது. தமிழகத்தில் 28 லட்சத்து 42 ஆயிரம் சிறு, குறு தொழில்கள் இருக்கிறது. கடத்த ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் 63 ஆயிரத்து 573 கோடி முதலீட்டில் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது.

கோவையில் இன்று நடைபெறும் சந்திப்பில் சென்னையை விட அதிக அளவு வர்த்தகம் நடைபெறும் என எதிர்பார்க்கிறோம். திமுக அரசு பொறுப்பேற்ற பின் சிறு, குறு தொழில் முனைவோர் சார்பில் வெளிநாடுகளில் நடைபெறும் சந்திப்புகளில் பங்கேற்க 250 நிறுவனங்களுக்கு நிதியை பெற்றுக் கொடுத்திருக்கிறோம்.

இதையும் படிங்க: முருகனுக்கு அரோகரா.. சூரசம்ஹாரத்தை காண திருச்செந்தூரில் அலைகடலென குவிந்த பக்தர்கள்!

ஒட்டுமொத்த ஏற்றுமதி தமிழகம் அதிக பங்கு வகிக்கிறது: இந்தியாவில் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்களிப்பு 9.25 சதவீதமாக இருக்கிறது. நடப்பாண்டில் வளர்ந்து வரும் துறைகளான மின்சார வாகனங்கள், மெட்ரோ கெமிக்கல் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதி அதிகரித்து இருக்கிறது. இந்த ஏற்றுமதியை ஊக்குவிக்கும் விதமாக திருப்பூர், கரூர், மதுரை, ஆம்பூர், தூத்துக்குடி, பொள்ளாச்சி, காஞ்சிபுரம், சென்னை, கோவை, ஓசூர் ஆகிய 10 இடங்களில் ஏற்றுமதி மையங்கள் நிறுவுவதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

தொழிற்பேட்டை அமையப்படும்: செலவம்பாளையம் கிராமத்தில் 18 கோடி மதிப்பீட்டில் தனியாருடன் இணைந்து தொழிற்பேட்டை அமைக்கப்பட்டு வருகிறது. சூலூர் அருகே அறிஞர் அண்ணா தொழிற்பேட்டைக்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. குறிச்சி தொழிற்பேட்டையில் 22 கோடி மதிப்பீட்டில் 510 தொழிலாளர்கள் தங்கும் விடுதி கட்டப்பட்டு வரும் நிலையில் விரைவில் முதலமைச்சர் திறந்து வைக்க இருக்கிறார். மேலும் சின்னவேடம் பட்டியில் 5 கோடி மதிப்பீட்டில் அலுமினியம் அச்சு வார்ப்பு தொழில் மையம் அமைக்கப்பட்டு வருகிறது.

பொள்ளாச்சியில் கயிறு குழுமம்: தென்னை நார் கயிறு தொழிலை மேம்படுத்த கோவையை தலைமையிடமாக கொண்டு தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் கயிறு குழுமம் அமைக்கும் பணி உள்ளிட்டவையும் நடைபெற்று வருகிறது.

கோவைக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக 126 கோடி மதிப்பீட்டில் தங்க நகை தயாரிப்பிற்காக NAPL ஆங்கீகாரத்துடன் கூடிய ஆய்வகத்துடன் அடுக்குமாடி வளாகம் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். 2030 ல் ஒரு ட்ரில்லியன் பொருளாதாரம் என்பதை நோக்கி பணியாற்றி வருகிறோம்”என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.