ETV Bharat / state

கொடநாடு வழக்கில் தொடர்பு படுத்தி பேசிய வழக்கு...எடப்பாடிக்கு தனபால் ரூ.1.10 கோடி நஷ்ட ஈடு வழங்க உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - KODA NADU

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம், 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்டஈடு வழங்கவும் உத்தரவிட்டது.

தனபால்
தனபால் (Image credits-ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 7, 2024, 3:32 PM IST

சென்னை:கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம், 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்டஈடு வழங்கவும் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

2017ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதியன்று கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளை நடைபெற்றது. அங்கிருந்த காவலாளியும் கொல்லப்பட்டார். இது தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்த நிலையில் கனகராஜின் சகோதரர் தனபால், சமீப காலமாக, அந்த வழக்கு தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு படுத்தி பேட்டியளித்து வந்தார். அது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. வழக்கு விசாரணையில் இருக்கும் நிலையில் தனபால் இவ்வாறு பேசுவதை தவிர்க்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி இருந்தார். ஆனால் அதனை அவர் கேட்கவில்லை.

இதையடுத்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், "கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள நிலையில், தன் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில், தனது அரசியல் எதிரிகளின் தூண்டுதலால், தனபால் பொய்யான தகவல்களை கூறி வருகிறார். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் என்னை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதிக்க வேண்டும். ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும்.," எனக் கூறியிருந்தார்.

இதையும் படிங்க: மகன் அல்லது மகள் என வாரிசு இருந்தாலும் ஆதரவற்ற விதவைக்கான சான்று வழங்கப்படும்...-சு.வெங்கடேசன் கோரிக்கையை ஏற்று அரசு நடவடிக்கை!

இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமியின் தரப்பு சாட்சியத்தை பதிவு செய்ய ஆணையராக வழக்கறிஞர் எஸ். கார்த்திகை பாலனை நியமித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. வழக்கறிஞர் ஆணையர் எஸ்.கார்த்திகைபாலன், எடப்பாடி பழனிசாமியின் சாட்சியத்தை பதிவுசெய்து, அதுகுறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இதையடுத்து இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி டீக்காராமன், "கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதிக்கப்படுகிறது. மேலும், அவருக்கு மான நஷ்ட ஈடாக ஒரு கோடியே 10 லட்சம் ரூபாயை தனபால் வழங்க வேண்டும்," என்று உத்தரவிட்டுள்ளார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.