ETV Bharat / state

ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து பணம், செல்போனை பறித்தவருக்கு ஜாமீன் வழங்க மறுப்பு..! - ஐகோர்ட் மதுரை கிளை

ஓரினச்சேர்க்கை செயலி மூலம் பேசி தனி இடத்துக்கு வர சொல்லி வந்தவர்களை தாக்கியவருக்கு ஜாமீன் வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை மறுத்துவிட்டது.

உயர் நீதிமன்ற மதுரை கிளை
உயர் நீதிமன்ற மதுரை கிளை (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 7, 2024, 3:29 PM IST

மதுரை: தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன், மகேந்திரன், அருண்குமார் ஆகியோர் ஓரினச்சேர்க்கை செயலி (Grindr app) மூலமாக பேசி சிலரை தனி இடத்திற்கு வரச் சொல்லி தாக்கி பணம், மொபைல் பறித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், மூவரும் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், "மனுதாரர்கள் கிரைண்டர் செயலி (Grindr app) மூலமாக பல நபர்களிடம் பேசி குறிப்பிட்ட இடத்திற்கு வருமாறு அழைத்துள்ளனர். அங்கு வந்தவர்களை தாக்கி அவர்களிடமிருந்து செல்போன், பணம் உள்ளிட்டவற்றைப் பறித்துள்ளனர்.

இவர்களில் ஹரி கிருஷ்ணன் மீது ஏற்கனவே 5 வழக்குகள் நிலவையில் உள்ளன. மகேந்திரன் மீது ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. ஆகவே அவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது" என தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: விஜயை சந்திப்பாரா திருமாவளவன்..? கனிமொழி கொடுத்த நச் பதில்..!

அதையடுத்து, ஹரிகிருஷ்ணன் தரப்பில் மனுவை திரும்பப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஹரிக்கிருஷ்ணனின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, மற்ற மனுதாரர்கள் மகேந்திரன் மற்றும் அருண்குமார் ஆகியோருக்கு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் தினமும் காலை 10.30 மணிக்கு நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

கூகுள் பிளே ஸ்டோரில் கிரைண்டர் என்ற செயலி பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த செயலியில் முன் பின் தெரியாத நபர்களிடம் சேட்டிங் செய்யும் வசதி உள்ளது. இந்த செயலியின் மூலம் சில நபர்கள், குற்ற நோக்கத்துடன் பொதுமக்களை குறிப்பாக, இளம் வயதினரை குறி வைத்து ஏமாற்றி ஆசை வார்த்தைகளைக் கூறி, தனிமையில் சந்தித்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதும், அதன் மூலம், பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை வழிப்பறி செய்து வருவதாகவும் புகார்கள் வருகின்றன.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.