ETV Bharat / bharat

அமெரிக்க அதிபர் தேர்தல்..வரலாறு படைத்த இந்திய அமெரிக்கர்கள்! - SUHAS SUBRAMANYAM

இந்திய-அமெரிக்க வழக்கறிஞர் சுஹாஸ் சுப்ரமணியம் வர்ஜீனியா மற்றும் கிழக்கு கடற்கரையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய அமெரிக்கர் என்ற வரலாற்றைப் படைத்துள்ளார். மேலும்,அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளி அமெரிக்கர்கள் எம்பிக்கள் குழுவான சமோசா காகஸில் இணைந்துள்ளார்.

சுஹாஸ் சுப்ரமணியம்
சுஹாஸ் சுப்ரமணியம் (Photo Credits - ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 7, 2024, 1:25 PM IST

புதுடெல்லி: அமெரிக்க அதிபர் தேர்தலில் பிரதிநிதிகள் சபையில் 6 இந்திய அமெரிக்கர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இந்திய - அமெரிக்க வழக்கறிஞர் சுஹாஸ் சுப்ரமணியம் குடியரசுக் கட்சியின் மைக் கிளான்சியை தோற்கடித்துள்ளார். சுஹாஸ் சுப்ரமணியம் தற்போது வர்ஜீனியா மாநில செனட்டராக உள்ளார். சுஹாஸ் சுப்ரமணியம் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் வெள்ளை மாளிகை ஆலோசகராக பணியாற்றியவர்.

இது குறித்து இந்திய - அமெரிக்க வழக்கறிஞர் சுஹாஸ் சுப்ரமணியம் கூறியதாவது, “என் மீது நம்பிக்கை வைத்த விர்ஜீனியாவின் 10வது மாவட்ட மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நான் குடும்பத்தினருடன் இந்த மாவட்டத்தில் வசித்து வருகிறேன். எங்கள் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் எங்கள் குடும்பத்திற்கு தனிப்பட்டவையாகும். இந்த மாவட்டத்திற்கு சேவையாற்றுவது பெருமையாக உள்ளது" என தெரிவித்தார்.

சமோசா காகஸில் இணைப்பு: அமி பெரா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோ கண்ணா, பிரமிளா ஜெயபால் மற்றும் ஸ்ரீ தானேதர் ஆகிய ஐந்து இந்திய அமெரிக்கர்களை உள்ளடக்கிய 'சமோசா காகஸ்' ​​எம்பிக்கள் குழுவில் சுஹாஸ் சுப்ரமணியம் தற்போது இணைகிறார். தற்போதுள்ள ஐந்து இந்திய அமெரிக்க உறுப்பினர்களும் பிரதிநிதிகள் சபைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: "வரலாற்று வெற்றி"... டொனால்ட் டிரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

5 இந்திய அமெரிக்க எம்பிக்கள்:

ரீ தானேதர் - மிச்சிகனின் 13வது காங்கிரஸ் மாவட்டத்திலிருந்து, தொடர்ந்து இரண்டாவது முறையாக ஸ்ரீ தானேதர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2023ல் முதன்முறையாக அவர் அந்த தொகுதியில் வெற்றி பெற்றார்.

ராஜா கிருஷ்ணமூர்த்தி - இல்லினாய்ஸின் ஏழாவது காங்கிரஸ் மாவட்டத்தில், தொடர்ந்து ஐந்தாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். “இல்லினாய்ஸின் 8வது மாவட்ட மக்கள் காங்கிரஸில் தங்களை பிரதிநிதித்துவப்படுத்த தனது ஒப்பந்தத்தை நீட்டித்ததை முன்னிட்டு நான் பெருமைப்படுகிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ரோ கன்னா - இவர் கலிபோர்னியாவின் பதினேழாவது காங்கிரஸின் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

பிரமிளா ஜெயபால் - வாஷிங்டன் மாநிலத்தின் ஏழாவது காங்கிரஸ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். 2016 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் பெண் பிரமிளா ஜெயபால், அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தெற்காசிய அமெரிக்கப் பெண்.

அமி பெரா - இவர் 2013 முதல் கலிபோர்னியாவின் ஆறாவது காங்கிரஸ் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மூத்த இந்திய அமெரிக்க காங்கிரஸ்காரர். அவர் தொடர்ந்து ஏழாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.