ETV Bharat / state

நாம் தமிழர் கட்சிக்கு இடைத்தேர்தல் முடிவுகள் உணர்த்துவது என்ன?

author img

By

Published : Oct 29, 2019, 6:31 PM IST

Updated : Oct 31, 2019, 1:58 PM IST

சென்னை: மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்த வரவேற்பை வைத்து பார்க்கும்போது, நடைபெற்று முடிந்த இடைத்தேர்தலில் இந்த சிறிய முன்னேற்றமும் அக்கட்சிக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது என்றே கூற வேண்டும்.

naam-tamizhar-party

'வெற்றியோ, தோல்வியோ சண்டை செய்யனும்' என்ற வசனத்துக்கு ஏற்ப நடைபெறும் அனைத்து தேர்தலிலும் போட்டியிடுவது நாம் தமிழர் கட்சியின் வழக்கம். அந்த வகையில் நடந்து முடிந்த மக்களைவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்து களமிறங்கிய நாம் தமிழர் கட்சி கணிசமான வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்தது.

அதைத்தொடர்ந்து அக்டோபர் 21ஆம் தேதி நடைபெற்ற விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் வழக்கம்போல நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட்டது. விக்கிரவாண்டி தொகுதியில் மொத்தம் பதிவான 1,88,659 வாக்குகளில் நாதக சார்பில் போட்டியிட்ட கந்தசாமி 2,913 வாக்குகளை மட்டுமே பெற்றார். அதேபோல், நாங்குநேரி தொகுதியிலும் மொத்தம் பதிவான 1,70,624 வாக்குகளில் ராஜநாராயணனால் 2,662 வாக்குகளை மட்டுமே பெறமுடிந்தது.

நாம் தமிழர் கட்சி மக்களவைத் தேர்தலில் மொத்தம் 3.99 வாக்கு சதவிகிதத்தைப் பெற்றிருந்தது. அதில் விக்கிரவாண்டியை உள்ளடக்கிய விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் 24,609 வாக்குகளும், நாங்குநேரியை உள்ளடக்கிய திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் 49,898 வாக்குகளும் பெற்றிருந்தது. இதன்மூலம் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தலில் கணிசமான வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெறலாம் என்று அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்த்தபோது இரண்டு தொகுதிகளிலும் தலா 1.5 சதவிகித வாக்குகளை மட்டுமே அக்கட்சி பெற்றுள்ளது.

2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பெற்ற வாக்குகளை விட இது குறைவில்லை என்றாலும், நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் பெற்ற வாக்குகளை வைத்துப் பார்க்கும்போது, இத்தேர்தல் முடிவுகள் தம்பிகளுக்கு பெரும் ஏமாற்றத்தையே தந்துள்ளது. மேலும், மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் இத்தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படியென்றால் மக்களவைத் தேர்தலில் எடுத்துக்கொண்ட வேகத்தை சீமான் இடைத்தேர்தலில் எடுக்கத் தவறிவிட்டாரா என்றால் இல்லை என்பதே உண்மை. சீமான் எங்குப் பேசினாலும் அதில் ஈழத் தமிழர்களின் இனப்படுகொலை குறித்து பேசுவது வழக்கம். இதன்மூலம் திமுகவையும் காங்கிரஸையும் குறிவைத்துக் கடுமையாக விமர்சிக்கும் அவர் தற்போது ஆட்சியிலிருக்கும் பாஜகவையும் பிரதமர் மோடியையும் அதிகளவில் விமர்சிப்பதில்லை. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் பாஜகவின் இந்துத்துவ கொள்கைக்குக் எதிராக கொதித்து எழும்போதும், சீமான் மட்டும் இளைப்பாறுகிறாரா என்ற சந்தேகம் வாக்காளர்கள் மத்தியில் நிலவியது என்றே கூற வேண்டும்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

ஏனெனில், தற்போது ஆட்சியிலிருக்கும் பாரதிய ஜனதா கட்சியையும் பிரதமர் மோடியையும் சீமான் அதிகளவில் விமர்சிப்பதில்லை. அனைத்து எதிர்க்கட்சிகளும் பாஜகவின் இந்துத்துவ கொள்கைக்கு எதிராக கொதித்தெழும்போதும், சீமான் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.

இதுமட்டுமின்றி எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடும் விதமாக, ராஜிவ் காந்தியை கொலை செய்தது விடுதலைப் புலிகள்தான் என்றும், அவ்வாறு செய்தது சரிதான் எனவும் கொளுத்திப்போட அது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. போகிற இடங்களிலெல்லாம் சீமான் விதைத்துச் சென்ற காங்கிரஸ், திமுக வெறுப்பரசியலை நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக அறுவடை செய்துவிட்டது என்பதே உண்மை.

தொடர்ந்து தோற்றுத் தோற்று சண்டை செய்யும் சீமான் அடுத்த தேர்தலில் தனது யுக்தியை மாற்றிக்கொள்வரா அல்லது இதே படகில் பயணிப்பாரா என்பதற்குக் காலம்தான் பதில் சொல்லவேண்டும்.

இதையும் படிங்க: 'நாம் தமிழர் கட்சியைத் தடை செய்ய வேண்டும்' - இந்து தமிழர் கட்சி ராம ரவிக்குமார்!

Intro:Body:வெற்றியோ, தோல்வியோ போட்டியில் பங்கேற்பதே முக்கியம் என்ற அடிப்படையில் நடைபெறும் அனைத்து தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி பங்கேற்று போட்டியிட்ட வண்ணம் உள்ளது.

அந்த வகையில் நடந்து முடிந்த மக்களைவை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி கணிசமான வாக்குகளை பெற்று ஏழு இடங்களில் மூன்றாம் இடத்தை பிடித்தது.

அதன்பிறகு அக்டோபர் 21 ஆம் தேதி நடைபெற்ற விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது. அக்கட்சி சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்ட கந்தசாமி மொத்தம் பதிவான 1,88,659 வாக்குகளில் 2,913 வாக்குகளும், நாங்குநேரியில் போட்டியிட்ட ராஜநாராயணன் பதிவான 1,70,624 மொத்த வாக்குகளில் 2,662 வாக்குகளும் பெற்று தோல்வி அடைந்தனர்.

நாம் தமிழர் கட்சி மக்களவை தேர்தலில் மொத்தம் 3.99 வாக்கு சதவிகிதத்தை பெற்றிருந்தது. அதில் விக்கிரவாண்டியை உள்ளடக்கிய விழுப்புரம் மக்களவை தொகுதியில் 24,609 வாக்குகளும், நாங்குநேரியை உள்ளடக்கிய திருநெல்வேலி மக்களவை தொகுதியில் 49,898 வாக்குகளும் பெற்றிருந்தது. இதன்மூலம் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தலில் கணிசமான வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெறலாம் என்று அரசியல் வட்டாரங்கள் எதிர்ப்பார்த்த போது இரண்டு தொகுதிகளிலும் தலா 1.5 சதவிகித வாக்குகளை மட்டுமே அக்கட்சி பெற்றுள்ளது.

நாம் தமிழர் கட்சி 2016 விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் 594 வாக்குகளும், நாங்குநேரி சட்டமன்ற தேர்தலில் 2325 வாக்குகளும் பெற்றிருந்தது. இதை ஒப்பிட்டு பார்த்தால் தற்போது நடைபெற்ற இடைத்தேர்தலில் அக்கட்சி விக்கிரவாண்டியில் ஏறுமுகத்தையும், நாங்குநேரியில் அதே நிலையையும் தக்கவைத்துக் கொண்டுள்ளது என்பதை மறுக்க முடியாது.

இருப்பினும் மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்த வரவேற்பை வைத்து பார்க்கும் போது இந்த சிறிய முன்னேற்றமும் அக்கட்சிக்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளது என்றே கூற வேண்டும்.

அதேசமயம் போகிற இடங்களிளெல்லாம் சீமான் பேசும் காங்கிரஸ், தி.மு.க வெறுப்பு அரசியல் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வின் வெற்றிக்கு பலத்தை சேர்த்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Conclusion:
Last Updated : Oct 31, 2019, 1:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.