ETV Bharat / state

ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத சட்டப்பேரவைத் தேர்தல்: அரசியல் வெற்றிடம் என்பது கற்பனையே!

முதல் முறையாக இருபெரும் திராவிடக் கட்சிகளின் பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழ்நாடு ஒரு சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்கப் போகிறது. இதனைப் பயன்படுத்தி,'அண்ணன் எப்போது போவான் திண்ணை எப்போது காலியாகும்' என, தன் வாய்ப்புக்காகத் தமிழ்நாட்டில் காலூன்ற காத்திருக்கும் வலதுசாரி ஆதரவாளர்கள், இங்கு ஒரு அரசியல் வெற்றிடம் உருவாகியிருப்பதாக முழக்கமிடத் தொடங்கியுள்ளனர். தமிழ்நாட்டில் அரசியல் வெற்றிடம் என்பது உண்மைதானா? இல்லை; அது ஒரு மாயை என நிரூபித்திருக்கிறது நடப்பு அரசியல் களம்.

அரசியல் வெற்றிடம் என்பது கற்பனையே
அரசியல் வெற்றிடம் என்பது கற்பனையே
author img

By

Published : Feb 12, 2021, 9:20 PM IST

சென்னை: பெரியத் தலைவர்கள் இல்லாத நிலையில் தமிழ்நாட்டில் இந்தச் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த காலத்தில், காங்கிரசின் கு. காமராஜ், திமுகவின் சி.என்.அண்ணாதுரை போன்ற சிறந்து தலைவர்கள் தமிழ்நாட்டில் இருந்தனர். பின்னர், சிறந்த பேச்சாளரான முத்துவேல் கருணாநிதி, வசீகரமான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் இருந்தனர்.

கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோரது சமீபத்திய மறைவுக்குப் பின்னர், தமிழ்நாட்டில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக ஒரு பேச்சு எழுந்துள்ளது. இது அரசியல் விருப்பம் கொண்ட திரையுலகப் பிரபலங்கள் முழக்கமாக மட்டும் இல்லாமல், பாஜகவின் விருப்பமாகவும் உள்ளது. அந்த இடத்தை ஆக்கிரமிக்க இது சரியான தருணம் என்று வலதுசாரிகள் நம்புகின்றனர்.

இந்த வெற்றிடத்தை நிரப்பும் போட்டியிலிருந்து நடிகர் ரஜினிகாந்த் விலகியிருந்தாலும், அதற்குத் தகுதியானவர் என தன்னை முன்வைத்து கமல்ஹாசன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். ஆனால், கடந்த 2019 மக்களவைத் தேர்தல் முடிவுகளை வைத்து பார்க்கும்போது, அரசியல் மற்றும் தலைமைகளுக்கான வெற்றிடம் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

அரசியல் வெற்றிடம் என்பது கற்பனையே
அரசியல் வெற்றிடம் என்பது கற்பனையே

எப்போதாவது ஆச்சரியங்களை நிகழ்த்தும் அரசியல் களம், தற்போது திராவிட மண்ணிலும் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், கடந்த 1967ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டதிலிருந்து, தொடர்ந்து திமுக அல்லது அதிமுக மட்டுமே மாநிலத்தில் ஆட்சி செய்து வருகின்றது.

பல ஆண்டுகளாக, தமிழ்நாட்டில் இதுவரை நடந்த மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள், மாநிலத்தில் தேசியவாத அரசியலுக்கு ஓரளவு மட்டுமே இடம் இருக்கிறது என்பது நிரூபித்து வருகின்றன.

எம்.ஜி.ராமசந்திரன்
எம்.ஜி.ராமசந்திரன்

தற்போது அதிமுகவின் ஆளுமைமிக்க ஜெயலலிதாவும், அவரது அரசியல் எதிரியுமான கருணாநிதியும் காலமானதால், இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பவர்களின் முழக்கமாக 'அரசியல் வெற்றிடம்' என்பது மாறியுள்ளது.

முதலில் இந்த, அரசியல் வெற்றிடத்தை ரஜினிகாந்த் நிரப்புவார் எனக் கூறப்பட்டது; பின்னர் கமல்ஹாசன், தன்னை அந்த வெற்றிடத்தை நிரப்ப வந்தவராகக் கூறிக் கொண்டார். திராவிட சித்தாந்தத்தையும், மரபுகளையும் கேலி செய்து, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க வலதுசாரிகள் முயற்சிக்கின்றனர். அவர்களால் அதனை சாதிக்க முடியுமா?

திராவிட அரசியல் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதுடன், நன்றாக செயல்பட்டும் வருகிறது. திமுக அல்லது அதிமுக ஆகிய இரு கட்சிகளின் பெரிய தலைவர்கள் இல்லாத நிலையில், அந்தக் கட்சிகள் செயல்படாமலோ அல்லது மாநிலத்தை ஆள்வதில் அவற்றின் நிலையை இழக்கவோ இல்லை.

முத்துவேல் கருணாநிதி
முத்துவேல் கருணாநிதி

ஜெயலலிதாவும், கருணாநிதியும் தேசியக் கட்சிகளை தமிழ்நாட்டில் காலூன்ற விடாமல் அரசியலில் ஆதிக்கம் செலுத்திய மிகப்பெரிய சக்திகள் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். இருந்த போதிலும், அவர்கள் இருவரின் மறைவுக்குப் பின்னரும், திராவிட இயக்கங்களை எதிர்ப்பவர்களுக்கு எதுவும் சிறப்பாக அமையவில்லை.

கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், தமிழ்நாடு, தேசிய நீரோட்டத்திலிருந்து விலகி, திமுகவை ஆதரித்தது. 'மோடி வித்தை' இங்கு எடுபடவில்லை.

ஜெயலலிதா
ஜெயலலிதா

கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டாம் முறை ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்ட ஜெயலலிதா, சில மாதங்களுக்குப் பின்னர், டிசம்பரில் காலமானார். ​​கருணாநிதி, கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்டில் காலமானார்.

கடந்த 2019 ஆண்டு மக்களவைத் தேர்தல், அவர்கள் இருவரும் இல்லாமல் மாநிலத்தில் நடந்த முதல் தேர்தல். ஸ்டாலின், கடந்த 2016இல் திமுகவை வழிநடத்தி பரப்புரை மேற்கொண்டிருந்தாலும், மக்களவைத் தேர்தல் அவருக்குப் பெரும் சோதனையாகவே அமைந்தது.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட போது, திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில், ஊடகங்களிடம் ஸ்டாலின் பேசினார். அப்போது உணர்ச்சி பெருக்கின் காரணமாக, அவரது கன்னங்களில் கண்ணீர் வழிந்தது.

அரசியல் அடிவானத்தில் ஒரு தலைவர் பிறந்தார், மோடியை எதிர்த்து நடத்திய பரப்புரை காரணமாக, அவரது கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்றது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி, அதிமுக மற்றும் பாஜகவைப் படுதோல்வி அடைய செய்து, 39 மக்களவை இடங்களில் 38 இடங்களைப் பிடித்தது.

முதலமைச்சர் எதிர்கட்சி தலைவர்
முதலமைச்சர் எதிர்கட்சி தலைவர்

கருணாநிதியின் மற்ற அரசியல் வாரிசுகளை ஓரங்கட்டி கட்சியைத் திறம்பட தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததை ஸ்டாலினின் சாதனையாகக் கூறலாம். கட்சித் தலைவராகப் பொறுப்பேற்பதற்கு முன்பே, கருணாநிதி உயிருடன் இருந்தபோது, ​​அவரது மூத்த சகோதரர் மு.க. அழகிரி கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

அப்போதிருந்து, தென்மாவட்டங்களில் கட்சியின் வலுவானவராகக் கருதப்பட்ட அழகிரி அரசியல் வனவாசம் சென்றுவிட்டார். அவருடைய அரசியல் மறுவாழ்வு பிரகாசமாகத் தெரியவில்லை.

கனிமொழி ஒரு முன்னணி தலைவராக அறியப்பட்டாலும் அவருக்கு அதிக அதிகாரம் வழங்கப்படவில்லை.

ரஜினிகாந்த் கமல்ஹாசன்
ரஜினிகாந்த் கமல்ஹாசன்

பா.ஜ.க.வுடன் இணைந்து செயல்படும் ஆளும் அதிமுகவிற்கு எதிராக எதிர்ப்பலை வீசுவதால் அது திமுகவிற்கு ஒரு பெரிய சாதகமாக உருவாவதை ஸ்டாலின் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

அதிமுகவில் விரிசல் உள்ளது என்பது வெளிப்படையாகத் தெரிந்தாலும், தலைமை இல்லாததாகத் தெரியவில்லை. தனது நோக்கங்களை தெளிவுபடுத்திய வி.கே.சசிகலா சவால்கள் விடுத்திருந்த போதிலும், முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமிக்கு எந்த பிரச்னையும் இல்லை. துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்து அரசியல் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தினார்.

மக்களவை தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தாலும். 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில், அவரது தலைமையில் கட்சி 9 இடங்களில் வெற்றி பெற்று, ஆபத்தான நிலையில் இருந்த அரசாங்கத்தைக் காப்பாற்ற முடிந்தது.

அண்ணாவின் தம்பிகள்
அண்ணாவின் தம்பிகள்

இதுவரை அதிமுகவை ஒன்றாக வைத்திருந்தது அரசு அதிகாரம் என்ற பசை தான் என்பதை மறுப்பதற்கில்லை. இருப்பினும், முதலமைச்சராக இருப்பதன் மூலம், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் வழியில் தன்னை செல்வாக்கு மிக்கவர் என்ற பிம்பத்தை இ.பி.எஸ் கவனமாக உருவாக்கியதுடன், ஒரு விவசாயியாகவும் தன்னைக் காட்டிக் கொண்டார். அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் மேற்கு தமிழ்நாட்டின் 'கொங்கு' பகுதியில் இருந்து வந்த அவர், அந்த பகுதியில் அதிகமாக வசிக்கும் அவரது சொந்த சமூகத்தின் ஆதரவை பெற்றுள்ளார்.

​​முதலீடுகளை பெறுவதற்காக முதலமைச்சர் பழனிசாமி வெளிநாட்டுப் பயணம் சென்ற போது, சென்னை விமான நிலையத்தில், கட்சியின் பல தலைவர்கள் அவரது காலில் விழுந்து வணங்கிய போது கட்சிக்குள் அவர் ஒரு தலைவராக உருவெடுத்துள்ளார் என்பது தெரிந்தது.

சசிகலா மற்றும் அவரது மருமகன் டி.டி.வி தினகரனை எதிர்கொள்ளப் போவது ஜெயலலிதாவின் முன்னாள் நம்பிக்கைக்குரியவராகவோ அல்லது எடப்பாடியைச் சேர்ந்த விவசாயியாகவோ இருக்கலாம்.

இருவருக்கும் இடையில் சமரசம் ஏற்படலாம் என்பதையும் மறுக்க முடியாது. இருவருக்கும் இடையில் சமாதானம் எற்படுத்த பிஜேபி முயற்சிப்பதால், ஒரு கெளரவமான ஒப்பந்தம் ஏற்படக்கூடும்.

கடந்த 2014 இல் 44.3 விழுக்காடாக இருந்த அதிமுக வாக்கு வங்கி மக்களவை தேர்தலில் 31.26 விழுக்காடாக குறைந்துள்ளது என்பதும் உண்மைதான். இருப்பினும், அந்த வித்தியாசம் முழுவதுமாக திமுகவின் வாக்கு வங்கியாக மாறவில்லை. ஜெயலலிதா இல்லாத போதிலும், அதிமுக கட்சி கட்டுப்பாடு மிக்க ஒரு சக்தியாக உள்ளது.

தற்போதைய நிலவரப்படி, 'அரசியல் வெற்றிடம்' இல்லை என்பதைக் கடந்த 2019 மக்களவை தேர்தலைப் போல, இந்த சட்டப்பேரவைத் தேர்தல் மீண்டும் நிரூபிக்கக்கூடும்.

இதையும் படிங்க: இன்னும் கூட்டணி கதவுகளைத் திறக்காத அதிமுக: மீண்டும் 2006 யுக்தியில் தேமுதிக?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.