ETV Bharat / state

அடித்துக் கொலை செய்யப்பட்ட இளைஞர்; இருவர் கைது - சென்னை இளைஞரின் கொலை விவகாரம்

சென்னையில் இளைஞர் ஒருவரை அடித்துக் கொன்ற இரண்டு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

mysterious murder of youth in chennai mysterious murder murder of youth in chennai youth murder issue chennai youth mrder issue சென்னையில் இளைஞர் கொலை இளைஞரின் கொலை விவகாரம் சென்னை இளைஞரின் கொலை விவகாரம் கொலை வழக்கு
அடித்துக் கொலை
author img

By

Published : Feb 12, 2022, 11:57 AM IST

சென்னை: மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த கோகுல், ஏசி மெக்கானிக் படிப்பை முடித்துவிட்டு வேலை எதுவுமின்றி இருந்து வந்தார். இந்நிலையில் இவர், நேற்று முன்தினம் (பிப்.10), மேற்கு மாம்பலத்தில் உள்ள அம்மா உணவகத்தின் அருகே சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, வீடு திரும்பிய கோகுல், தூய்மை பணியாளரான தனது தந்தை கண்ணனிடம் கூறியுள்ளார். இதையடுத்து, சிறிதுநேரம் கழித்து தூங்கப்போவதாகக் கூறிய கோகுல், தனக்கு மயக்கம் வருவதாக பெற்றோரிடம் கூறியுள்ளார். சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார்.

இருவர் கைது

இவரது இறப்பில் சந்தேகமடைந்த தந்தை கண்ணன், குமரன் நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர், கோகுல் தாக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர்.

அதில், கோகுலை தாக்கியது, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சஞ்சய், ராமநாதபுரத்தைச் சேர்ந்த கோபி என தெரியவந்தது. இதையடுத்து, இவர்கள் இருவரையும் கைது செய்த காவல் துறையினர், தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: போதையில் தகராறு: அரை நிர்வாணமாகச் சுற்றிய வழக்கறிஞர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.