ETV Bharat / state

எவரஸ்ட் சிகரம் தொட்ட முத்தமிழ் செல்விக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு! - Everest mountain

எவரஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முத்தமிழ் செல்விக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Chennai airport
எவரஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண்
author img

By

Published : May 30, 2023, 2:50 PM IST

எவரஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண்: சென்னையில் உற்சாக வரவேற்பு!

சென்னை: விருதுநகர் மாவட்டம், ஜோயல்பட்டியை சேர்ந்த 34 வயது பெண்மணி முத்தமிழ் செல்வி, இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் குடும்பத்துடன் சென்னை தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கத்தில் தங்கி ஜப்பான் மொழி பயிற்றுவிற்பாளராக இருந்து வந்துள்ளார்.

பலர் சாதிப்பதைப் போல முத்தமிழ் செல்வி தானும் சாதிக்க எண்ணி பல்வேறு மலைகளில் கண்களை மூடியவாறு ஏறியும், இறங்கியும் மற்றும் வில் வித்தையில் சாதனை என பல சாதனைகளை புரிந்தவர். அதனைத் தொடர்ந்து எவரெஸ்ட் சிகரம் அடைய பயிற்சி மேற்கொண்டு வந்தார். ஆனால் பொருளாதார வசதி இல்லாமல் தவித்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து ரூ.10 லட்சம் அரசு சார்பில் உதவி வழங்கினார்.

அதையடுத்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ.15 லட்சம் அவரது சார்பாக கொடுத்து உதவினர். இதையடுத்து எவரெஸ்ட் மலை ஏறிய முத்தமிழ் செல்வி கடந்த 23 ஆம் தேதி எவரெஸ்ட் சிகரம் 8,848.86 மீட்டர் அடைந்து சாதனை படைத்தார். தற்போது தமிழ்நாட்டில் இருந்து எவரஸ்ட் சிகரத்தை ஏறிய முதல் பெண்ணாக முத்தமிழ் செல்வி சாதனை படைத்துள்ளார்.

இதையடுத்து முத்தமிழ் செல்வியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இந்த நிலையில் இன்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த முத்தமிழ் செல்விக்கு விமான நிலையத்தில், அவரது உறவினர்கள் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முத்தழ்செல்வி கூறுகையில், "தமிழக மக்களுக்கு வணக்கம். நான் எவரெஸ்ட் ஏற வேண்டும் என்று 3 ஆண்டு காலமாக யோசித்து வந்தேன். அன்றிலிருந்து இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தேன். அதனை நிறைவேற்ற எனக்கு உதவி செய்த தமிழக அரசுக்கும், தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், என் பயிற்சியாளர் திருலோக சந்தர் அனைவருக்கும் நன்றி" என்றார்.

மேலும், "தமிழ்நாட்டில் நிறைய பெண்கள் உள்ளார்கள். முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்பதற்கு ஏற்றவாறு இதனை சாதித்துள்ளேன். ஆகையால் மற்றவர்களாலும் முடியும். அவ்வளவு தூரத்தை கடப்பதற்க்கு 6 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் தான் கொடுப்பார்கள், ஆகையால் ஒவ்வொரு நிமிடமும் மிக முக்கியம். ஆனால் எனக்கு ஆக்சிஜன் பிரச்னை வந்த போது மெக்சிகன் உதவினார். மற்றவர்களுக்கு 36 மணி நேரம் பொதுவாக எடுத்துக் கொள்ளும். ஆனால் எனக்கு 48 மணி நேரம் ஆனது.

என் குழுவில் முதலில் இருந்து இறுதி வரை எவரஸ்ட் சிகரத்திற்கு நடந்த சென்றது நான் தான். மொத்தம் 56 நாட்கள் எவரஸ்ட் பயணம் இருந்தது. உலகில் உள்ள ஏழு கண்டங்களில் இருக்கும் உயரமான சிகரங்களை ஏற வேண்டும் என்பது தான் என் அடுத்த இலக்கு. அதில் ஏற்கனவே ஒன்று முடித்துவிட்டேன். அடுத்துள்ள 6 கண்டங்களில் உள்ள உயரமான சிகரங்களை ஏற வேண்டும். மேலும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உதவியால் விரைவில் சென்னை வர முடிந்தது" என முத்தமிழ் செல்வி தெரிவித்தார்.

இதையும் படிங்க: எவரெஸ்ட் சிகரம் தொட்ட தமிழன்: இளைஞர்களுக்கு கூறும் அட்வைஸ் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.