சென்னை மாவட்டம், பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில், அதிமுக கூட்டணிக் கட்சியான மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் இன்று (மார்ச்.25) காலை எம்.கே.பி நகர் தொகுதிக்குட்பட்ட வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி சாலை, கல்யாணபுரம், சத்தியமூர்த்தி நகர், உதயசூரியன் உள்ளிட்ட பகுதிகளில், சாலைகளில் நடந்து சென்று தொண்டர்களுடன் அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
தொடர்ந்து உதயசூரியன் நகர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் அவர் ஈடுபட்டு வந்த போது, திடீரென்று ஒருவர் கத்தியுடன் ஓடி வந்து என்.ஆர்.தனபாலனை வெட்ட முயன்றுள்ளனர். ஆனால், தனபாலன் சுதாரித்து, ஓரமாக நகர்ந்து விட்டார். இதில் அதிமுக நிர்வாகி சிவக்குமாரின் கையில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இதனையடுத்து அரிவாளாள் வெட்டிய நபர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரப்பரப்பு ஏற்பட்டது. காயமடைந்த சிவக்குமாரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: தீப்பிடித்து எரிந்த ராணுவப் பயிற்சி வாகனம்: 3 வீரர்கள் உடல் கருகி உயிரிழப்பு!