ETV Bharat / state

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஷ்வர்நாத் பண்டாரி நியமனம்!

சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்புத் தலைமை நீதிபதியாகப் பதவி வகித்து வரும் முனீஷ்வர்நாத் பண்டாரியை, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க, உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரையை ஏற்ற குடியரசுத் தலைவர், நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரியை, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

author img

By

Published : Feb 10, 2022, 8:19 PM IST

Munishwar bhandari appointed as Chief Justice of Madras High Court சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஷ்வர்நாத் பண்டாரி நியமனம்
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஷ்வர்நாத் பண்டாரி நியமனம்

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதை அடுத்து, அலகாபாத் உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியான முனீஷ்வர்நாத் பண்டாரி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்பட்டார்.

கடந்த ஆண்டு நவம்பர் 22இல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்ற நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, பொறுப்புத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

குடியரசு தலைவர் முனீஷ்வர்நாத் பண்டாரியை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் முனீஷ்வர்நாத் பண்டாரியை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து உத்தரவு!

பரிந்துரையை ஏற்ற குடியரசுத் தலைவர்

அது முதல் சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்புத் தலைமை நீதிபதியாக, பதவி வகித்து வரும் அவரை, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க, உச்ச நீதிமன்ற கொலிஜியம், பரிந்துரைத்துள்ளது.

இந்த பரிந்துரையை ஏற்ற குடியரசுத் தலைவர், நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரியை, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

விரைவில் அவர், சென்னை உயர் நீதிமன்றத்தின் 51ஆவது தலைமை நீதிபதியாகப் பதவியேற்றுக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் (2022) செப்டம்பர் 12ஆம் தேதி வரை அவருக்குப் பதவிக்காலம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி

முனீஷ்வர்நாத் பண்டாரி ராஜஸ்தான் அரசு வழக்கறிஞராகவும், ரயில்வே வழக்கறிஞராகவும், அணுசக்தித் துறையின் வழக்கறிஞராகவும் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

2007 ஜூலை 5 அன்று ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்ற இவர், 2019ஆம் ஆண்டு அலகாபாத் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

அலகாபாத் உயர் நீதிமன்றத்தில், கடந்த ஜூன் முதல் அக்டோபர் வரை பொறுப்பு நீதிபதியாக பதவிவகித்துள்ள முனீஷ்வர்நாத் பண்டாரி, சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்புத் தலைமை நீதிபதியாக, அண்மையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி (நவ.22) பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இவர் 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி ஓய்வு பெறவுள்ளார்.

இதையும் படிங்க: 'தமிழ்நாட்டில் பிறந்திருக்க வேண்டும் என நான் கனவு கண்டிருக்கிறேன்' - முனீஷ்வர்நாத் பண்டாரி

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.