சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நேற்று முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கான நினைவேந்தல் கூட்டத்தை மே 17 இயக்கம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்தது. இதனையடுத்து பெசன்ட் நகர் பஸ் பணிமனை அருகே இருந்து , தடையை மீறி நினைவேந்தல் கூட்டத்தை நடத்துவதற்காக மே 17 இயக்கம் உள்ளிட்ட பல அமைப்பினர் ஒன்று கூடினர்
தாரை தப்பட்டை உடன் கோஷமிட்டுக் கொண்டு பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை நோக்கி ஊர்வலமாக செல்ல முற்பட்டவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி பெசன்ட் நகர் பஸ் டிப்போ ரவுண்டானா அருகே கைது செய்தனர். அடையாறு கஸ்தூரிபாய் நகரிலுள்ள சமுதாய நலக் கூடத்தில் தங்க வைக்கப்பட்ட அவர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
பின்னர் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச் செயலாளர்கள் வன்னியரசு, ரஜினிகாந்த், தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட தலைவர் குமரன் உள்ளிட்டோர் மீது சாஸ்திரி நகர் போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க :மாநில உரிமை குறித்து திமுக பேசுவது விநோதமானது - திருமுருகன் காந்தி