ETV Bharat / state

சென்னையில் சாதாரணப் பேருந்துகள் அதிகமாக இயக்கப்படுவது ஏன்? - Chennai Municipal Transport Corporation

சென்னையில் வழக்கத்திற்கு மாறாக சாதாரணப் பேருந்துகள் அதிகமாக இயக்கப்படுவதற்கு தேர்தல் ஒரு காரணமா என்று கேள்வி எழுந்துள்ளது, இது குறித்து இச்செய்தியில் காண்போம்.

சென்னை மாநகர போக்குவரத்து கழகம்  சென்னையில் பேருந்துகள் அதிகமாக இயக்கப்படுவது ஏன்  தேர்தல் பேருந்துகள்  mtc ordinary buses increased in chennai  mtc ordinary buses  Chennai Municipal Transport Corporation  Election buses
mtc ordinary buses increased in chennai
author img

By

Published : Apr 3, 2021, 4:09 PM IST

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) சார்பில் சுமார் 3 ஆயிரத்து 500 பேருந்துகள் சென்னை நகரத்திலும், புறநகர்ப் பகுதிகளிலும் இயக்கப்படுகின்றன. இதில், சாதாரண, விரைவு, சொகுசு உள்ளிட்ட மூன்று வகையான பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கடந்த காலங்களில் சாதாரணப்பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படுவதில்லை என்பதே பயணிகளின் புகாராக இருந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களாக சாதாரணப்பேருந்துகள் அதிகமாக இயக்கப்படுகிறது என்ற தகவலும், இது தேர்தலின் பின்னணியில் இயக்கப்படுகிறது என்ற செய்தியும் வெளியாகி உள்ளது.

பெரும்பாலான சொகுசுப் பேருந்துகள் சாதாரண பேருந்துகளாக மாற்றப்பட்டுள்ளன என்றும் போக்குவரத்து வட்டாரங்களில் பேசப்படுகிறது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்ற பொது போக்குவரத்தைக் காட்டிலும்; மாநகரப் பேருந்து போக்குவரத்தையே பெரிதும் விரும்புகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 பேருந்துகளில், 75 முதல் 80 விழுக்காடு வரை சொகுசுப் பேருந்துகள் இயக்கப்பட்டது என்கிறது ஒரு நம்பத்தகுந்த தகவல்.

ஆனால், சாதாரணப் பேருந்துகள் 20 விழுக்காடு வரைதான் இயக்கப்பட்டது. எனினும், 2021ஆம் ஆண்டு ஜனவரி முதல் 50 விழுக்காடுக்கு மேல் சாதாரணப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்று கூறப்படுகிறது. கட்டணத்தைப் பொறுத்தமட்டில், சாதாரணப் பேருந்துகளில் குறைந்த பட்சமாக 5 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. மேலும் விரைவுப் பேருந்துகளில் 7 ரூபாயும், சொகுசுப் பேருந்துகளில் 11 ரூபாயாகவும் வசூலிக்கப்படுகிறது.

அதிகபட்சமாக சாதாரணப்பேருந்துகளில் 20 ரூபாயும், விரைவுப்பேருந்துகளில் 30 ரூபாயும், சொகுசுப் பேருந்துகளில் 41 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. எனவே, பயணிகளை மகிழ்விக்கும் வகையிலும் தேர்தலை குறி வைத்தும் இந்தப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன என ஒரு சில போக்குவரத்து அலுவலர்கள் ஒப்புக்கொண்டனர். இது தினமும் வேலைக்குச் செல்கின்ற லட்சக்கணக்கான பயணிகளைக் குறி வைத்து இயக்கப்படுகிறது.

இது குறித்து மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் பயணச்சீட்டு பரிசோதகர் கூறியதாவது, "சில பயணிகள் பயணக் கட்டணம் குறைவாக இருப்பதால், சாதாரண பேருந்துகளை அதிக அளவில் விரும்புகின்றனர். கடந்த ஆண்டுகளில் சாதாரணப் பேருந்துகள் குறைவாகவே இயக்கப்பட்டதால், பயணிகள் சொகுசுப் பேருந்துகளில் பயணம் செய்து அதிக கட்டணத்தை கொடுத்து தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்குப்போக நிர்பந்தப்பட்டார்கள்.

பேருந்து அதிகமாக இயக்கப்படுவது ஏன்?

பயணிகளின் புகார்களின் படி, இரவு நேரங்களில் குறிப்பாக இரவு 10 மணிக்கு மேல், சாதாரண பேருந்துகளை நகரத்தின் எந்த ஒரு வழித்தடங்களிலும் பார்க்க முடியாது". தற்போது, அந்த நிலை மாறியிருக்குகிறது என்பதை சூசகமாகத் தெரிவித்தார்.

தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொதுச் செயலாளர் எம்.சண்முகம் நம்மிடம் தொலைபேசி வாயிலாக கூறுகையில், "இந்த முடிவு தேர்தலை முன்னிறுத்தி எடுத்திருக்க வாய்ப்புகள் அதிகம். ஒரு காலத்தில் சாதாரணப் பேருந்துகளை பயணிகள் பார்ப்பது அரிது. இந்த நேரத்தில் இந்த வகையான பேருந்துகளை அதிகப்படுத்த என்ன காரணம் என்பதை நன்கு உணர்ந்தால், இது தேர்தலை மையப்படுத்தியே எடுத்திருக்க வேண்டும்" என்ற அவர் போக்குவரத்துத் துறையில் இன்னும் பணியாளர்களுக்கு அளிக்க வேண்டிய நிதிப் பலன்களை வழங்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

பேருந்துப் பயணி க.முத்துவேல் கூறுகையில், "பெரும்பாலான மஞ்சள் நிறப் பேருந்துகள், அதாவது சொகுசுப் பேருந்துகள், சாதாரண பேருந்துகளாக மாற்றப்பட்டுள்ளன. இதைப் பேருந்து நடத்துநர்கள் பேருந்து நிறுத்தங்களில் பயணிகளிடம் உரக்க கூறுகின்றனர்.

இந்தப் பேருந்துகளின் கண்ணாடியின் முன்னே 'சாதாரண கட்டணம்' என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. இந்த திடீர் முடிவை பற்றி தனக்குத் தெரியவில்லை" என்றார்.

இது குறித்து மாநகர போக்குவரத்துக் கழக அலுவலர் நம்மிடம் கூறுகையில், "சில விரைவுப் பேருந்துகளை சாதாரணப் பேருந்துகளாக மாற்றியுள்ளோம் என்பது உண்மை. ஆனால், இந்த முடிவுக்கும் தேர்தலுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை" எனக் கூறினார்.

இதையும் படிங்க: சென்னை பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.