சென்னை: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் புதிதாக இரண்டாவது மற்றும் மூன்றாவது அணு உலைகளின் கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன.
இந்நிலையில் இங்கு உற்பத்தியாகவுள்ள கதிரியக்கம் கொண்ட அணுக்கழிவுகளைச் சேகரித்து வைக்க, அணுமின் நிலைய வளாகத்திலேயே கழிவுகளின் இருப்பிடம் அமைக்க ஒன்றிய அரசின் இந்திய அணுமின் கழகம் தீர்மானித்துள்ளது. இந்தத் திட்டத்துக்கு இந்திய அணுசக்தி ஒழுங்காற்று முறை வாரியம் ஜூலை 23ஆம் தேதி அனுமதி வழங்கியது.
தமிழ்நாட்டைத் தவிர வேறு இடம் இல்லையா?
பின்னர் இதே வளாகத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள நான்கு அணு உலைகளின் கட்டுமானப் பணிகளும் வேகமெடுத்துள்ளன. ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு அந்தப் பகுதி மக்களும், "பூவுலகின் நண்பர்கள்" அமைப்பினரும் தொடர்ந்து கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.
அணு கழிவு விவகாரத்தின் வீரியத்தை உணர்ந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மக்களவை உறுப்பினர் டி.ஆர். பாலுவுடன் இதுகுறித்து ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனையின் முடிவில் அணுக்கழிவு விவகாரத்தை பிரதமர் மோடியின் கவனத்திற்கு திட்டத்தைக் கைவிட உரிய முயற்சிகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டது.
இந்நிலையில் அணுக்கழிவு விவகாரம் குறித்து மக்களவை உறுப்பினர் டி.ஆர். பாலு, பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று (ஜூலை 7) விரிவான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். மேலும் அதில் கூடங்குளம் அணு கழிவுகளைக் கொட்ட தமிழ்நாட்டைத் தவிர வேறு இடம் இல்லையா? எனவும், உச்ச நீதிமன்ற உத்தரவை ஒன்றிய அரசு ஏற்காதா என்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு, மக்களவை உறுப்பினர் டி.ஆர். பாலு கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை திமுக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளது.
இதையும் படிங்க: இதயத்தை உலுக்கிய காணொலி.. உடனடி கைது தேவை.. வருண் காந்தி!