சென்னை: பான்பிர்பூர் பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்க வந்த உத்தரப் பிரதேசத்தின் துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியாவை வரவேற்க அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா காரில் சென்றுகொண்டிருந்தார்.
அப்பகுதியில் போராட்டம் நடத்திய விவசாயிகள், ஆஷிஷ் மிஸ்ராவின் காரை மறித்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஆஷிஷ், போராடிய விவசாயிகள் மீது காரை ஏற்றியதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
இதையடுத்து நடந்த வன்முறைகளில் 8 பேர் உயிரிழந்தனர். இது குறித்து கண்டங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இச்சம்பவம் குறித்து எம்பி திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
அதில், உ.பியில் நடந்துள்ள கொடூரம் நெஞ்சைப் பதற வைக்கிறது. இந்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவ் மகன் ஆசிஷ் மிஸ்ரா சென்ற கார், போராட்டத்தில் ஈடுபடா விவசாயிகள் மீது மோதச் செய்ததில் பலர் உயிரிழந்துள்ளனர்.
இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். இதற்குப் பொறுப்பேற்று யோகி ராஜினாமா செய்யவேண்டும் என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கலவர பூமியான லக்கிம்பூர் கேரி - நான்கு கம்பெனி படையினர் குவிப்பு